CSK vs DC : என்னோட 50 ஆவது மேட்ச்ல இது நடந்ததில் சந்தோசம். வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி

Ruturaj-Gaikwad
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Warner and Dhoni

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன்குவிப்பை வழங்க முக்கிய காரணமாக இருந்த சென்னை அணியின் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த போட்டியில் 50 பந்துகளை சந்தித்த அவர் மூன்று பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 79 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தார். அவரது இந்த ஆட்டம் வெற்றிக்கு உதவியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Ruturaj Gaikwad

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த போட்டி எங்களுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டிய முக்கியமான போட்டியாக இருந்தது. அதோடு சென்னை அணிக்காக நான் விளையாடும் ஐம்பதாவது போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

அதோடு இந்த வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களை அடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது எளிதாக இருந்தது.

இதையும் படிங்க : வீடியோ : ராரா சரசுக்கு ராரா, வெறியுடன் கேட்ட ரசிகர் – எஸ்கேப் ஆன ரோஹித் சர்மா, நடந்தது என்ன

முதல் 10 முதல் 12 ஓவர்கள் வரை விளையாடி நாங்கள் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்ததால் பின்னால் வந்த சிவம் துபே, தோனி, ஜடேஜா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement