பிஎஸ்எல் 2023 : தார் ரோட் பிட்ச்சில் 2வது முறையாக அடித்து நொறுக்கப்பட் பாபர் அசாம் அணி – தோல்வியால் படுத்தாரா?

PSL Babar Azam
Advertisement

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 2023 சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்தொடரில் மார்ச் 10ஆம் தேதியன்று நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பெஷாவர் ஜால்மி மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின. ராவில்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவரில் அதிரடியாக செயல்பட்டு நேரம் செல்ல செல்ல விரைவாக 134 ரன்கள் சேர்த்த ஓப்பனிங் ஜோடியில் சாய்ம் ஆயுப் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 58 (33) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Babar Azam

அவருடன் தனது பங்கிற்கு இம்முறை சதத்தை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் பாபர் அசாம் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (39) ரன்கள் குவித்து அவுட்டானார். மிடில் ஆர்டரில் ரோவ்மன் போவல் 2, ஹசீபுல்லா கான் 7 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் முகமத் ஹாரீஸ் 35 (11), கோலர்-கேட்மோர் 38 (18), ஓமர்சாய் 16* (6) என இதர பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். முல்தான் சார்பில் அதிகபட்சமாக அப்பாஸ் அப்ரிடி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

நொறுக்கப்பட்ட பெஷாவர்:
அதைத் தொடர்ந்து 243 ரன்களை துரத்திய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் 7, ஷான் மசூட் 5 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்து களமிறங்கிய ரிலீ ரோசவ் – கைரன் பொல்லார்ட் ஆகியோர் சுமாராக பந்து வீசிய பெஷாவர் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி அடுத்த 7.1 ஓவரில் 3வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

அதில் பொல்லார்ட் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 52 (25) ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த டிம் டேவிட் 2 ரன்களிலும் குஷ்தில் ஷா 18 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி வெளுத்து வாங்கிய ரிலீ ரோசவ் 41 பந்துகளில் சதமடித்து பிஎஸ்எல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்தார். இதற்கு முன் கடந்த 2020 சீசனில் 43 பந்துகளில் சதமடித்திருந்த அவர் இப்போட்டியில் அதை விட வேகமாக சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 8 சிக்ஸருடன் 121 (51) ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதை வீணடிக்காமல் கடைசியில் அன்வர் அலி 24* (8) ரன்களும் உஸ்மா மிர் 11* (3) ரன்களும் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 244/6 ரன்கள் எடுத்த முல்தான் அணி 4 விக்கெட்களை வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. முன்னதாக இதற்கு முந்தைய போட்டியில் 240 ரன்கள் அடித்தும் அதை குயிட்டா அணி ஜேசன் ராய் அதிரடியில் வெறித்தனமாக வெற்றிகரமாக சேசிங் செய்து பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் அணியை தோற்கடித்தது. தற்போது அதற்கடுத்த போட்டியிலேயே 242 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் மோசமாக பந்து வீசிய பெஷாவர் அணி மீண்டும் முரட்டுத்தனமான அடி வாங்கி படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

முன்னதாக கடந்த ஒரு வருடமாகவே பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் கூட தார் ரோட் போல் பிளாட்டான பிட்ச் அமைக்கப்பட்டு வருவது உலக அளவில் கிண்டல்களை ஏற்படுத்தியது. அந்த நிலைமையில் இந்த பிஎஸ்எல் தொடரிலும் அதை விட மோசமான பிளாட்டான பிட்ச்கள் அமைக்கப்பட்டுள்ளதாலயே அடுத்தடுத்த போட்டிகளில் 240+ ரன்கள் எளிதாக சேசிங் செய்யப்பட்டுள்ளன. அதை விட கடந்த போட்டியில் சதமடித்தும் வெற்றி காண முடியாத பாபர் அசாம் இந்த போட்டியில் 73 ரன்கள் குவித்தும் தமது அணி பவுலர்களின் மோசமான பந்து வீச்சால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க:வீடியோ : பவுண்டரியுடன் சதமடித்து ஆஸிக்கு பதிலடி கொடுத்த சுப்மன் கில், கேஎல் ராகுல் இடத்தில் அபாரம் – 2017க்குப்பின் அசத்தல் சாதனை

சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை அறிந்த அவர் போட்டி முடிவதற்கு முன்பாகவே பெவிலியனுக்கு சென்று தலை மீது கை வைத்து சோகமாக படுத்துக்கொண்டார். குறிப்பாக இந்த தார் ரோட் பிட்ச்சில் இந்த பவுலிங்கை வைத்துக்கொண்டு கேப்டன்ஷிப் செய்ய தைரியம் இல்லாமல் தான் பாபர் அசாம் முன்கூட்டியே பெவிலியன் திரும்பியதாக ரசிகர்கள் வழக்கம் போல கலாய்த்தனர். ஆனால் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தாலேயே முன்கூட்டியே போட்டியிலிருந்து வெளியேறியதாகவும் அதை புரிந்து கொள்ளாமல் கிண்டலடிக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் வல்லுநர்கள் அதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

Advertisement