வீடியோ : பவுண்டரியுடன் சதமடித்து ஆஸிக்கு பதிலடி கொடுத்த சுப்மன் கில், கேஎல் ராகுல் இடத்தில் அபாரம் – 2017க்குப்பின் அசத்தல் சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோற்றது. அதனால் ஜூன் மாதம் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவை டாஸ் வென்று ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் சிறப்பாக எதிர்கொண்ட ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 3, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் தொடக்க வீரர் உஸ்மான் கவஜா சதமடித்து 180 ரன்களும் கேமரூன் க்ரீன் சதமடித்து 114 ரன்களும் குவித்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் அஷ்வின் 6 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் சிறப்பாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அசத்தல் சதம்:
இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் அரை சதம் கடந்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி ஆஸ்திரேலியாவை சிறப்பாக எதிர்கொண்ட அவருடன் ஜோடி சேர்ந்த புஜாரா தனது பங்கிற்கு பொறுமையின் சிகரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அவரை விட மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் ஏற்கனவே உச்சகட்ட பார்மில் இருப்பதை பயன்படுத்தி பவுண்டரியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 2வது சதமடித்து இந்த தொடரில் முதல் சதமடித்த இந்திய வீரராக அசத்தினார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் சதமும், இரட்டை சதமும் அடித்திருந்த அவர் டி20 தொடரில் சதமடித்திருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ளார். இதன் வாயிலாகடெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் 2017க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் சுப்மன் கில் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுரேஷ் ரெய்னா (2010)
2. கேஎல் ராகுல் (2016)
3. ரோஹித் சர்மா (2017)
4. சுப்மன் கில் (2023)*

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக தடவலாக செயல்பட்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்த கேஎல் ராகுலுக்கு பதில் விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் 3வது போட்டியில் சுமாராக செயல்பட்ட போது சில விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இப்போட்டியில் சதமடித்து அதை தூளாக்கியுள்ள அவர் தற்போதுள்ள ஃபார்முக்கு ராகுலை விட நான் சிறந்தவன் என்பதையும் நிரூபித்துள்ளார். அத்துடன் பிளாட்டான பிட்ச்சில் “நீங்களே இப்படி அடித்தால் நாங்கள் சும்மா விடுவோமா” என்ற வகையில் ஆஸ்திரேலியாவுக்கு அவர் பதிலடி கொடுத்து வருகிறார். இருப்பினும் அவருடன் 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த புஜாரா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : 6 இன்னிங்சில் 5 முறை ஆஸ்திரேலிய அணியின் வீரரை சுருட்டி வீசிய அஷ்வின் – இதெல்லாம் வேறலெவல் தான்

அவரது சிறப்பான ஆட்டத்தால் 3வது நாள் தேநீர் இடைவெளிக்கு முன்பு வரை 188/2 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 292 ரன்கள் பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலைமையில் இன்னும் இரண்டரை நாட்கள் எஞ்சியிருந்தாலும் பிட்ச் பிளாட்டாக இருப்பதால் தற்சமயத்தில் இப்போட்டி டிராவில் முடிவடைவதற்கே அதிக வாய்ப்புள்ளது. ஆனால் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி முக்கிய நேரத்தில் டிரா செய்து இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியா போராடும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement