IND vs AUS : 6 இன்னிங்சில் 5 முறை ஆஸ்திரேலிய அணியின் வீரரை சுருட்டி வீசிய அஷ்வின் – இதெல்லாம் வேறலெவல் தான்

Ashwin-1
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இந்திய அணி மூன்று போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வி என இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

Ashwin

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெடுக்களையும் இழந்து 480 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. அதன்படி மூன்றாம் நாளான இன்று இரண்டாவது செஷன் வரை இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 150 ரன்கள் என்ற வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

இருந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தகுதி பெறும் என்ற கட்டாயமும் இந்திய அணிக்கு உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஸ்வின் 47.2 ஓவர்களில் 15 மெய்டன்களுடன் வெறும் 91 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Ashwin 2

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் வெவ்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி வரும் தமிழக வீரர் அஸ்வின் குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிக அற்புதமாக செயல்படக் கூடியவர் என்பது நாம் அறிந்தது. இந்நிலையில் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரிக்கு எதிராக இவர் அற்புதமாக செயல்பட்டு உள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

குறிப்பாக இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெறும் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த நிலையில் அஸ்வின் அவரை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே அலெக்ஸ் கேரிக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் அவருக்கு எதிராக பந்துவீசியுள்ள அஸ்வின் 40 பந்துகளை வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 முறை அவரை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : 63 வருஷ சாதனையை முறியடித்த உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி – விவரம் இதோ

வழக்கமாகவே இடது கை பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தும் அஷ்வின் இந்த தொடரில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி களமிறங்கும் போதெல்லாம் எளிதாக சுருட்டி வீசியுள்ளார் என்றே கூறலாம்.

Advertisement