IND vs AUS : 63 வருஷ சாதனையை முறியடித்த உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி – விவரம் இதோ

Khawaja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

IND vs AUS

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களையும், கேமரூன் கிரீன் 114 ரன்கள் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்து 351 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Cameron-Green

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் துவக்கவீரர் கவாஜா மற்றும் அதிரடி ஆட்டக்காரரான கேமரூன் கிரீன் ஆகியோரது ஜோடி ஆஸ்திரேலிய அணி சார்பாக 63 ஆண்டு கால சாதனையை தகர்த்து ஒரு அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த ஆஸ்திரேலிய ஜோடியாக ஹுகஸ் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோராது ஜோடி 1979-80 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 222 ரன்கள் குவித்தது. இதுவே இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா ஜோடி அமைத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஓ நில் மற்றும் ஹார்வி ஆகியோரது ஜோடி 1959-60 ஆம் ஆண்டுகளில் 207 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த இரண்டாவது ஆஸ்திரேலிய ஜோடியாக இருந்தது.

இதையும் படிங்க : கேப்டனா இருந்தாலும் ரன்கள் அடிக்கணும்னு கங்குலியிடம் நேரா சொல்வாரு – சேவாக்கின் நேர்மையை பாராட்டும் முன்னாள் வீரர்

இந்நிலையில் இந்த ஜோடியின் 63 ஆண்டுகால சாதனையை தகர்த்த கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரது ஜோடி 5 ஆவது விக்கெட்டிற்கு 208 ரன்கள் குவித்து இந்திய மண்ணில் அதிக பாட்னர்ஷிப் அமைத்த இரண்டாவது ஆஸ்திரேலிய ஜோடி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement