கேப்டனா இருந்தாலும் ரன்கள் அடிக்கணும்னு கங்குலியிடம் நேரா சொல்வாரு – சேவாக்கின் நேர்மையை பாராட்டும் முன்னாள் வீரர்

Virender Sehwag ganguly
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் தனக்கென்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அறிமுகமான காலம் முதலே எதிரணி பவுலர்களை ஆரம்பத்திலேயே செட்டிலாக விடாமல் அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு மிரட்டலான தொடக்கத்தை கொடுப்பார். அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடி சரவெடியான பவுண்டரிகளை பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் அலுப்பு தட்டும் டெஸ்ட் போட்டிகளை கூட ரசிகர்கள் விரும்பி பார்க்கும் அளவுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.

Sehwag

- Advertisement -

குறிப்பாக 90 ரன்களை தொட்டதும் சிங்கிள், டபுள் எடுத்து எப்படியாவது சதத்தை அடிக்க வேண்டும் என்று தடுமாற்றத்துடன் செயல்படும் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் 290 ரன்களில் இருந்தால் கூட எதை பற்றியும் கவலைப்படாமல் பவுண்டரி அல்லது சிக்ஸரை பறக்க விட்டு சதத்தை தொடும் ஸ்டைலை கொண்ட விரேந்தர் சேவாக் இந்திய கிரிக்கெட்டில் “அதிரடி” எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை காண்பித்து அதனுடைய இலக்கணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.

நேர்மையான சேவாக்:
மொத்தத்தில் அதிரடியாக விளையாடுவதில் சுனில் கவாஸ்கர், சச்சின் ஆகியோரை விட இந்தியாவின் மிகச் சிறந்த வீரராக செயல்பட்ட அவர் ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு வளர்ந்ததில் முன்னாள் கேப்டன் கௌரவ கங்குலி முக்கிய பங்காற்றினார். ஏனெனில் 1999ஆம் ஆண்டு அறிமுகமானாலும் 2001ஆம் ஆண்டு தமது தலைமையில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கிய அவருக்கு தேவையான வாய்ப்புகளையும் ஆதரவுகளையும் கொடுத்த கங்குலி தன்னுடைய ஓப்பனிங் இடத்தையும் கொடுத்தார்.

Sehwag

ஆனால் அந்த சமயத்தில் ஃபார்மை இழந்து தடுமாறிய கங்குலியிடம் நீங்கள் கேப்டனாகவே இருந்தாலும் ரன்கள் அடிக்கவில்லை என்றால் அதிரடியாக நீக்கப்படுவீர்கள் என்று சேவாக் நேரடியாக தெரிவித்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதே போல் சச்சினை ஒரு விதமாகவும் தம்மை ஒரு விதமாகவும் வழி நடத்திய பயிற்சியாளர் ஜான் ரைட் பற்றி பிசிசிஐயிடம் புகார் கொடுக்கப் போவதாக அவரிடமே சேவாக் நேருக்கு நேராக தெரிவித்ததாகவும் ரசிகர்கள் அறியாத பின்னணியை ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த சமயத்தில் இந்திய அணியில் விளையாட துவங்கிய ஆகாஷ் சோப்ரா சேவாக்கின் நேர்மை மற்றும் வெளிப்படையாக பேசும் பண்பு பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விரேந்தர் சேவாக் எப்போதும் என்னிடம் “பாருங்கள் ப்ரோ நீங்கள் ரன்கள் அடிக்கவில்லை என்றால் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். அது எனக்கும் பொருந்தும்” என்று அடிக்கடி சொல்வார். இதை சில சமயங்களில் அவர் “தாதா அனைத்தும் சரி. கேப்டனாக இருக்கும் நீங்கள் ரன்கள் அடிக்க வேண்டும் இல்லையென்றால் நீங்களும் நீக்கப்படுவீர்கள்” என்று கங்குலியிடமே நேரடியாக தெரிவித்துள்ளார்”

Chopra

“அவர் இவ்வாறு சொல்வதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் உண்மையாக நேர்மையாக வெளிப்படையாக இதை சொன்னார். அது மிகவும் அன்பாகவும் இருந்தது. பெரும்பாலானவர்கள் இதை இப்படி நேரடியாக சொல்லவே மாட்டார்கள். ஆனால் அவர் “நான் இப்படிதான் பேசுவேன். வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டு விடுங்கள்” என்று நேரடியாக சொல்வார். அந்த வகையில் தங்கமான மனம் கொண்ட அவர் எப்போதுமே தனது கருத்தை பேசுவதற்கு தயங்க மாட்டார். அதே போல் அவர் தமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அதையும் வெளிப்படையாக சொல்லிவிடுவார்”

இதையும் படிங்க:IND vs AUS : இந்தியா இந்த 4 ஆவது டெஸ்டில் ஜெயிக்க வாய்ப்பே இல்லையாம் – புள்ளிவிவரம் கூறுவது என்ன?

“ஒரு முறை பயிற்சியாளர் ஜான் ரைட் சேவாக்கிடம் சரியாக பேசவில்லை. அப்போது “ஜான் உங்களுக்கு எதிராக பிசிசிஐயிடம் நான் புகார் செய்ய உள்ளேன். நீங்கள் சச்சினை ஒரு மாதிரியும் என்னை ஒரு மாதிரியும் நடத்துகிறீர்கள். ஒருவேளை சச்சின் சிறந்த வீரர் என்பதால் அவரை அப்படி நடத்துகிறீர்களா” என்று நேரடியாக அவரிடம் சேவாக் பேசினார். அந்த வகையில் சேவாக் நேர்மையான வேடிக்கையான மனிதர். மிகச் சிறந்த சாம்பியன் வீரர். அவர் தன்னுடைய காலத்திற்கு மிஞ்சிய கிரிக்கெட்டை விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement