IND vs AUS : இந்தியா இந்த 4 ஆவது டெஸ்டில் ஜெயிக்க வாய்ப்பே இல்லையாம் – புள்ளிவிவரம் கூறுவது என்ன?

IND
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

IND vs AUS

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது மார்ச் 9-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இந்த கடைசி போட்டியில் விளையாடி வரும் விதம் நிச்சயம் தோல்வியை தராது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டுமெனில் இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவுகளின் கையில்தான் தற்போது உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்துள்ளது.

Ashwin

மேலும் ஏற்கனவே இரண்டு நாட்கள் ஆட்டம் முடிந்து நிலையில் தற்போது மூன்றாம் நாளில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் தோல்வியை சந்திக்காது என புள்ளி விவரங்கள் கூறுவதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் இன்னிங்ஸில் 479 ரன்களுக்கு மேல் தங்களது முதல் இன்னிங்சில் குவித்த எந்த ஒரு அணியும் இந்திய மண்ணில் தோற்றதே கிடையாது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 480 ரன்களை அடித்த ஆஸ்திரேலிய அணி நிச்சயம் தோல்வியை சந்திக்காது என்றும் போட்டி டிராவில் முடியவோ அல்லது இந்திய அணி தோல்வியை சந்திக்கவோ தான் அதிக வாய்ப்புள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : IND vs AUS : இந்த மேட்ச்ல அஷ்வின் 6 விக்கெட் எடுத்துட்டு சிரிக்க இதுவே காரணம் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

இப்படி புள்ளி விவரங்கள் கூறுவது போல ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்திக்காமல் போனால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பு மேலும் இக்கட்டான நிலைக்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement