அடுத்த வேர்லடுகப்ல விராட் கோலி ஆடுறத உங்கள தவிர யாரும் விரும்பமாட்டாங்க – பாண்டிங் அளித்த கருத்து

Ponting-and-Kohli
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான விராட் கோலி கடந்த 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது அணியில் இடம் பிடித்திருந்த வீரர். அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை அணியில் அவர் இடம் பெற்று இருந்தாலும் இந்திய அணி அந்த கோப்பைகளை தவறவிட்டது. ஆனால் சொந்த மண்ணில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் அவருக்காக இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றே அனைவரும் கூறி வருகின்றனர்.

ஏனெனில் சச்சினுக்கு அடுத்து கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியை தனது தோளில் சுமந்து வரும் விராட் கோலிக்கு இந்த உலகக் கோப்பை வென்று பரிசளிப்பதே அவர் இந்திய அணிக்காக வழங்கிய பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்த நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி விராட் கோலியும் தனிப்பட்ட முறையில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள வேளையில் இந்த தொடரில் மட்டும் விராட் கோலி இரண்டு சதங்கள் மற்றும் பல அரை சதங்களை விளாசி 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். எனவே எதிர்வரும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் கட்டாயம் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்றும் அதில் விராட் கோலி முக்கிய பங்கு வகிப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 35 வயதை எட்டியுள்ள விராட் கோலி 39 வயதில் அடுத்த உலகக் கோப்பையை விளையாடுவாரா? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் ஒரு கருத்து ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது விராட் கோலி விளையாடும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : அந்த இந்திய ஜாம்பவானோட ஆலோசனை தான் நான் சதமடிக்க காரணம்.. நன்றி சொன்ன ஆப்கானிஸ்தான் சாதனை வீரர்

அவரின் வயதை எண்ணி பார்க்காமல் அடுத்த உலக கோப்பையில் அவர் விளையாடுவாரா? என்று பார்த்தால் நிச்சயம் முடியும். ஆனால் இந்திய ரசிகர்கள் மட்டுமே விராட் கோலி அடுத்த உலககோப்பையில் விளையாடுவதை விரும்புவார்கள். அவர்களை தவிர்த்து வேறுயெந்த ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். ஒருவேளை அப்படி அடுத்த முறையும் அவர் உலகக் கோப்பையில் விளையாடினால் நிச்சயம் 600 முதல் 700 ரன்கள் வரை விராட் கோலியால் குவிக்க முடியும் என்றும் பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement