ராகுல் டிராவிட் எடுத்த இந்த முடிவு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு – ரிக்கி பாண்டிங் ஓபன்டாக்

Ponting
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளருக்கான தேடலின் முடிவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அதிகாரபூர்வமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ உறுதிசெய்தது.

dravid

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது ராகுல் டிராவிட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரின் வருகையால் நிச்சயம் இந்திய அணி வலுப்பெறும் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டிராவிடின் இந்த பயிற்சியாளர் பதவி குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்று டிராவிட் எடுத்த முடிவு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில் அவரால் அவரது குடும்பத்துடன் எத்தனை நாட்கள் செலவழிக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

dravid

இருப்பினும் அவரின் தலைமையின் கீழ் பல இளம் இந்திய வீரர்கள் நிச்சயம் இந்திய அணிக்காக உருவாவார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு எனக்கும் சில ஆஃபர்கள் வந்தன. ஆனால் நான் அப்படி பயிற்சியாளர் பதவியை ஏற்றால் 300 நாட்கள் கிட்டத்தட்ட இந்தியாவிலேயே இருக்க நேரிடும். அதன் காரணமாகவே அதனை மறுத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி மாதிரி வருவார்னு நெனச்சேன். ஆனா என்னை அவரு ஏமாத்திட்டாரு – இன்சமாம் உல் ஹக் கருத்து

மேலும் டெல்லி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் நான் விலக விரும்பவில்லை. இதன் காரணமாகவும் அந்த வாய்ப்பை மறுத்தேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட எடுத்த முடிவு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எப்படி அவர் இதை எதிர் கொள்ளப் போகிறார் என்பதை காணவும் ஆவலாக உள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement