தோனி மாதிரி வருவார்னு நெனச்சேன். ஆனா என்னை அவரு ஏமாத்திட்டாரு – இன்சமாம் உல் ஹக் கருத்து

Inzamam
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மகேந்திரசிங் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உச்சம் தொட்ட ஒரு வீரர். ஒரு கேப்டனாக, விக்கெட் கீப்பராக, ஒரு பினிஷராகவும் இந்திய அணிக்காக பல ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டு வந்த தோனி கடந்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓய்வை அறிவித்தார். அவருக்கு பின்னர் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக நிலைத்து நின்று ஆடக்கூடிய ஒருவராகக் கருதப்பட்டவர் ரிஷப் பண்ட். தோனி அணியில் இருக்கும் போதே இந்திய அணியில் இணைந்த ரிஷப் பண்ட் அடுத்த தோனியாக மாறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

dhoni with pant

- Advertisement -

தனது கிரிக்கெட் கரியரின் துவக்க காலத்தில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் இடையில் சற்று தொய்வு அடைந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதன்பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு மீண்டும் ரிஷப் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்திற்கு மாறியிருந்தார். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பையிலும் அவர் முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட்-டின் ஆட்டம் தன்னை ஏமாற்றி உள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ரிஷப் பண்ட்-டின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை வைத்திருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் விளையாடிய விதம் அவரை உயர்ந்த இடத்தில் பார்க்க வைத்தது.

Pant

ஆஸ்திரேலிய மண்ணில் அவர் விளையாடிய அந்த டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய தொடர்கள் என அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அதனால் பண்ட் தோனியை போன்று மாறுவார் என்று நான் நம்பினேன். அதேபோன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் விழும்போது நிச்சயம் இவர் மிடில் ஆர்டரில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்த்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்றைய இரண்டாவாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஆனால் உலககோப்பை தொடரில் அவர் என்னுடைய எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டார் என்று கூறியுள்ளார். உலக கோப்பை போட்டியிலும் சரி தற்போது நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சரி அவரது திறன் வெளிவரவில்லை. ரொம்பவும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். நான் ரிஷப் பண்ட் இடமிருந்து இதுபோன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் அவர் தனது திறமையை உணர்ந்து மீண்டும் அவரது ஆட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் இன்சமாம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement