இன்றைய இரண்டாவாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்திய அணி ஒரு வெற்றியுடன் தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளதால் இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsNZ 1

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்ய நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டும் என்கிற காரணத்தினால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாம் உத்தேச பட்டியலாக இந்த தொகுப்பில் காண உள்ளோம்.

அதன்படி இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஒன்று கடந்த போட்டியில் பந்து வீசும்போது காயமடைந்த சிராஜ்-க்கு பதிலாக ஹர்ஷல் படேல் அல்லது ஆவேஷ் கான் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. அதை தவிர்த்து அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் இடம்பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

siraj 2

மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று விட்டு அடுத்த போட்டியில் வேண்டுமானால் சில மாற்றங்கள் கூடுதலாக இருக்கலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : பர்பெக்ட் புள்ஷாட். ட்ரென்ட் போல்ட் வீசிய பந்தை 89 மீட்டர் பெரிய சிக்சருக்கு பறக்கவிட்ட – ரோஹித்

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) சூர்யகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) வெங்கடேஷ் ஐயர், 7) அஷ்வின், 8) தீபக் சாகர், 9) புவனேஷ்வர் குமார், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ஹர்ஷல் படேல்/அவேஷ் கான்

Advertisement