பர்பெக்ட் புள்ஷாட். ட்ரென்ட் போல்ட் வீசிய பந்தை 89 மீட்டர் பெரிய சிக்சருக்கு பறக்கவிட்ட – ரோஹித்

Pull
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி தற்போது டெஸ்ட் தொடருக்காக தயாராக ஓய்வு எடுத்துள்ளார். இவ்வேளையில் ரோகித் சர்மா எவ்வாறு அணியை வழிநடத்த போகிறார் என்று அனைவரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் முதலாவது டி20 போட்டியில் சிறப்பாக அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெறவும் வைத்தார். இந்த போட்டியில் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ரன்களை குவிக்க அடுத்ததாக 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிகரமான சேசிங்கிற்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மாவின் அதிரடியான துவக்கமும் காரணமாக அமைந்தது.

ஏனெனில் முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவர்களில் ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் 50 ரன்கள் குவித்தனர். அணியின் எண்ணிக்கை 50 ரன்கள் இருந்த போது ராகுல் ஆட்டமிழந்து வெளியேற ரோஹித் ஒருபுறம் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் என 48 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட கரியர்ல அஷ்வின் இப்படி ஒரு தப்பு பண்ணி நான் பாத்ததே இல்ல – மார்ட்டின் கப்தில் ஓபன்டாக்

அதிலும் குறிப்பாக டிரென்ட் போல்ட் வீசிய ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை அவர் லெக் சைடில் புல் ஷாட் மூலம் அடித்த சிக்ஸர் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதுமே லெக் சைடில் புள் ஷாட் சிறப்பாக ஆடும் ரோஹித் சர்மா அடித்த இந்த சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement