என்னோட கரியர்ல அஷ்வின் இப்படி ஒரு தப்பு பண்ணி நான் பாத்ததே இல்ல – மார்ட்டின் கப்தில் ஓபன்டாக்

Ashwin
- Advertisement -

ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதல் ஓவரிலேயே துவக்க வீரர் டேரல் மிட்சல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

guptill

- Advertisement -

அப்போது நியூசிலாந்து அணி ஒரு ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் அணியின் அனுபவ வீரரான கப்தில் மற்றும் இளம்வீரரான சேப்மன் ஆகியோர் நிலைத்து நின்று 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சேப்மன் 50 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் வெளியேறினார்.

அதேவேளையில் கப்தில் 42 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் என 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். நியூசிலாந்து அணி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் அடித்தாலும் பின் வரிசையில் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட தவறியதால் 10 முதல் 15 ரன்கள் வரை நியூசிலாந்து அணி குறைவாக அடித்து தோல்வியை சந்தித்தது.

ashwin 1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினின் பவுலிங் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள கப்தில் அதுகுறித்து கூறுகையில் : அஷ்வின் போன்று லைன் மற்றும் லென்த்தை சரியாக வீசும் பந்து வீச்சாளரை நான் பார்த்ததில்லை. என்னுடைய கிரிக்கெட் கரியரில் அவர் ஒரு தவறான பந்தினை எனக்கெதிராக வீசியதாக எனக்கு நியாபகமே இல்லை. அந்த அளவிற்கு தனது பந்து வீச்சில் அஷ்வின் எப்போதும் சிறப்பாக செயல்படுபவர்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : டஃக் அவுட்டில் அமர்ந்திருந்த சிராஜின் தலையின் ஓங்கி ஒரு அடிவிட்ட ரோஹித் சர்மா – நடந்தது என்ன?

அஷ்வின் எனக்கு தெரிந்து மோசமான பந்தினை வீசியதே கிடையாது என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பந்து வீச்சில் லைன் அன்ட் லென்த் மாறாமல் வீசும் அவர் சரியான வேகத்திலும், மைதானங்களில் தன்மைக்கு ஏற்பவும் பந்துவீச கூடியவர் என்று தெரிவித்தார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அஷ்வின் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement