அந்த பாகிஸ்தான் பிளேயர் செம பார்ம்ல இருக்காரு. அவர்கிட்ட எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க – பாண்டிங் கருத்து

Ponting-and-Pakistan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்று முடிவுகளின் அடிப்படையில் குரூப் ஒன்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியும், குரூப் இரண்டில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணியும் மோத இருக்கின்றன.

INDvsPAK-1

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றினால் அதற்கு முக்கிய காரணமாக ஷாஹின் அப்ரிடி திகழ்வார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு தனது முழு உடல் தகுதியை அவர் எட்டவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் தற்போது முன்பை விட மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையை கைப்பற்றினால் நிச்சயம் அவர்தான் பாகிஸ்தான் அணியின் கீ பிளேயராக இருப்பார்.

Shaheen Afridi PAK vs RSA

கடைசியாக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் அவர் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய திறமையை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அதேபோன்று இந்திய அணியிலும் விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணியில் ஒரு பெரிய வீரர் தங்களது முழுதிறனையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அது அணிக்கு நம்பிக்கையை கொடுத்து அந்த அணி கோப்பையை கைப்பற்ற பெரிதளவில் உதவும். அந்த வகையில் ஷாஹீன் அப்ரிடியின் பார்ம் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் அளவில் வலுசேர்த்துள்ளது. எனவே அவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் சற்று கவனமாக அவரை எதிர்த்து விளையாட வேண்டும் என பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : நீங்க இருந்த வரைக்கும் போதும் கெளம்புங்க. புதிய கேப்டனை அறிவித்த பஞ்சாப் அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து சரிவுகளை கண்டு அரையிறுதி வாய்ப்பை தவறவிடும் நிலையில் இருந்த பாகிஸ்தான் அணியானது தற்போது அரையிறுதியை எட்டியுள்ளதால் அவர்களது ஆட்டம் முன்பை விட இன்னும் பல மடங்கு ஆக்ரோஷமாக இருக்கும் என்று பலராலும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement