IPL 2023 : நீங்க இருந்த வரைக்கும் போதும் கெளம்புங்க. புதிய கேப்டனை அறிவித்த பஞ்சாப் அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Agarwal
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு 16-வது ஐபிஎல் தொடரானது அடுத்த வருடம் மார்ச் இறுதியில் துவங்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறையும், சி.எஸ்.கே நான்கு முறையும் கோப்பையை கைப்பற்றி அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்ற அணியாக திகழ்ந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் ஆர்.சி.பி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை இந்த அணிகள் செய்து பார்த்தாலும் கோப்பையை அவர்களால் எட்ட முடியவில்லை.

இதனால் இந்த ஆண்டும் அந்த அணிகள் தங்களுக்கு தேவையான சில மாற்றங்களை செய்து தங்களது அணியை பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு சென்ற பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் கோப்பையை கைவிட்டது.

Shikar Dhawan

இவ்வேளையில் தற்போது பல்வேறு மாற்றங்களை கையில் எடுத்து பஞ்சாப் அணி தங்களது அணியை மாற்றி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அணியின் கேப்டனாக இருந்த அகர்வாலை அந்த அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு அகர்வாலின் தலைமையில் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்று கூட முன்னேறவில்லை. இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான அணில் கும்ப்ளே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது டிரெவர் பேலிஸ் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக முன்னணி துவக்க வீரரும், அனுபவ ஆட்டக்காரருமான ஷிகார் தவான் அதிகாரவபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : செமி பைனலில் விளையாடப்போவது யார்? அஷ்வினா? சாஹலா? – டிராவிட் அளித்த பதில்

பஞ்சாப் அணி இதுவரை 16 சீசன்களில் தற்போது 14-வது முறையாக அவர்களது அணியின் கேப்டனை மாற்றியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியையும், சன்ரைசர்ஸ் அணியையும் கேப்டனாக வழிநடத்திய அனுபவம் உடைய தவான் இம்முறை பஞ்சாப் கிரிக்கெட் அணிக்காக நிச்சயம் ஒரு நல்லதொரு கேப்டனாக செயல்படுவார் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Advertisement