டி20 உலகக்கோப்பை : செமி பைனலில் விளையாடப்போவது யார்? அஷ்வினா? சாஹலா? – டிராவிட் அளித்த பதில்

Ashwin-and-Chahal
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் விளையாடிய 12 அணிகளில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நான்கு அணிகள் தற்போது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதன்படி இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Semi Finals

- Advertisement -

அதனை தொடர்ந்து நவம்பர் 10-ஆம் தேதி நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மோதவிருக்கின்றன. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை சேர்க்கப்படாமல் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ள யுஸ்வேந்திர சாஹல் அரையிறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்று பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

ஏனெனில் அஷ்வினால் ரன்களை கட்டுப்படுத்த முடிகிறதே தவிர விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. அதே வேளையில் விக்கெட் டேக்கராக பார்க்கப்படும் யுஸ்வேந்திர சாஹல் அரையறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அஷ்வின் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு விளையாடுகிறார்.

மேலும் இறுதிக்கட்டத்தில் அவரால் பேட்டிங்கிலும் கைகொடுக்க முடியும் என்பதனாலேயே அவர் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறார். இந்நிலையில் அரையிறுதி போட்டியின் பிளேயிங் லெவனில் விளையாடப்போகும் சுழற்பந்து வீச்சாளராக அஷ்வின் இருப்பாரா? அல்லது சாஹல் இருப்பாரா? என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிட் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

அரையறுதி போட்டியில் விளையாடப்போகும் சுழற்பந்து வீச்சாளர் யார்? என்பதை நாங்கள் இதுவரை முடிவு செய்யவில்லை. மேலும் பிட்சை நேரில் சென்று பார்த்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கடைசியாக இங்கு நடந்த போட்டியை நான் பார்த்தேன். அதில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

இதையும் படிங்க : ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 4 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

ஆனால் நாங்கள் இங்கு அடிலெயிடு மைதானத்தில் விளையாடியபோது ஸ்பின்னர்களுக்கு டர்ன் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பந்து இங்கு நன்கு டர்ன் ஆகிறது. எனவே போட்டிக்கு முன்பு எந்த ட்ராக்கில் ஆட்டம் நடைபெற இருக்கிறதோ அந்த களத்தின் அடிப்படையில் தான் சாஹலா அல்லது அஷ்வினா? என்று முடிவெடுக்கப்படும் என டிராவிட் சூசகமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement