ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த டாப் 4 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

kohli
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திரில்லர் திருப்பங்களை ரசிகர்களுக்கு விருந்தளித்து நாக் அவுட் சுற்றை எட்டியுள்ளது. பொதுவாகவே கிரிக்கெட்டில் இரு தரப்பு தொடர்களில் விளையாடுவதற்கும் உலக கோப்பையில் விளையாடுவதற்கு மிகப்பெரிய வித்தியாசமும் அழுத்தமும் இருக்கும். அதை விட உலகக் கோப்பையிலேயே லீக் சுற்றில் விளையாடுவதற்கும் நாக் அவுட் சுற்றில் விளையாடுவதற்கும் அழுத்தம் என்பது மும்மடங்கு அதிகமாக இருக்கும்.

காரணம் என்னவெனில் லீக் சுற்றில் தவறுகள் செய்தால் கூட அடுத்த போட்டிகளில் திருத்திக் கொண்டு வெற்றி நடை போடலாம். ஆனால் நாக் அவுட் சுற்றில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் 100% சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை சுவைக்க முடியும். அதில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறு தவறு செய்தாலும் கூட வெற்றி எதிரணியின் பக்கம் சென்ற விடும். அந்த அழுத்தமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கூட நாக் அவுட் சுற்றில் லேசாக கை கால்களில் நடுங்க வைத்து பதற்றத்தை உருவாக்கி எளிதாக ரன்களை குவிக்க தடையை ஏற்படுத்தும்.

- Advertisement -

ஆனால் சில வீரர்கள் லீக் சுற்றில் தடுமாறினாலும் நாக் அவுட் போட்டிகளில் அல்வா சாப்பிடுவது போல் அழுத்தத்தை அசால்டாக சமாளித்து பெரிய அளவில் ரன்களை குவித்து ஹீரோக்களாக தங்களது அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்கள். அவர்களையே ரசிகர்களும் வல்லுனர்களும் “பிக் மேட்ச் பிளேயர்ஸ்” என்றும் போற்றுவார்கள். அந்த வகையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அடங்கிய நாக் அவுட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்களை பற்றி பார்ப்போம்:

4. குமார் சங்கக்காரா 173: வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இலங்கை பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இவர் 2009 – 2014 வரையிலான காலகட்டத்தில் தனது அணிக்காக விளையாடிய 7 நாக் அவுட் போட்டிகளில் 173 ரன்களை 34.60 என்ற சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக 2014இல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 131 ரன்களை துரத்தும் போது 52* (35) ரன்கள் குவித்த அவர் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

3. திலகரத்னே தில்சன் 197: இலங்கையின் மற்றொரு அதிரடி வீரரான இவர் 2009 – 2014 வரையிலான காலகட்டத்தில் களமிறங்கிய 5 நாக் அவுட் போட்டிகளில் 197 ரன்களை 32.83 என்ற சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 3வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக 2009 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் சரவெடியாக 96* (57) ரன்கள் குவித்த அவர் தனது அணியை பைனலுக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதை வென்றார்.

3. மர்லான் சாமுவேல்ஸ் 215: சில வீரர்கள் லீக் சுற்றில் தடுமாறினாலும் நாக் அவுட் சுற்றில் விஸ்வரூபம் எடுப்பார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவரென்று கூறலாம். ஏனெனில் 2012 – 2016 வரையிலான காலகட்டத்தில் அவர் களமிறங்கிய 5 நாக் அவுட் போட்டிகளில் 215 ரன்களை 71.66 என்ற சிறப்பான சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 2012 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 78 (56) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர் 2016 உலக கோப்பையில் ஃபைனலில் 85* (66) ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் 2 கோப்பைகளை வெல்ல துருப்புச்சீட்டாக செயல்பட்டதை யாராலும் மறக்க முடியாது.

1. விராட் கோலி 238*: சில நேரங்களில் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் அதிர்ஷ்டம் இல்லாமல் போவதும் இதர வீரர்கள் சொதப்புதும் ஒரு வீரரின் உழைப்பை மண்ணாக்கிவிடும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இவர் என்றால் மிகையாகாது. ஏனெனில் 2014 – 2016 ஆகிய 2 உலக கோப்பைகளில் களமிறங்கிய 3 நாக் அவுட் போட்டிகளில் 238* ரன்களை 238.00 என்ற இமய மலையிலான சராசரியில் குவித்துள்ள அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக 2014 உலகக்கோப்பை பைனலில் இந்தியா எடுத்த 130 ரன்களில் தனி ஒருவனாக 77 (58) ரன்கள் குவித்த அவர் 2016 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா எடுத்த 192 ரன்களில் 89* (47) ரன்களை எடுத்த போதிலும் இதர வீரர்களின் சொதப்பலால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும் அந்த மாவீரனுக்கு அந்த 2 உலகக் கோப்பையின் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகள் சமர்ப்பிக்கப்பட்டது என்றுமே வரலாறு பேசக்கூடியது.

Advertisement