இந்தியாவின் 2024 டி20 உ.கோ தரமான விக்கெட் கீப்பர் யார்? லெஜெண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

Ricky Ponting 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

அந்த நிலையில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, இஷான் கிசான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதே போல காயத்திலிருந்து கம்பேக் கொடுத்து டெல்லி அணிக்காக அசத்தி வரும் ரிஷப் பண்ட் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதை விட பெங்களூரு அணிக்காக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 38 வயதிலும் 226 ரன்களை 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வருகிறார்.

- Advertisement -

பாண்டிங் தேர்வு:
அதனால் 2022 டி20 உலகக் கோப்பை போல அவரும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சன், இஷான் கிசான், கேஎல் ராகுல் போன்ற நிறைய வீரர்கள் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்காக அசத்தி வருவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களை விட தம்மை பொறுத்த வரை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு சரியானவர் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேனா? எனக் கேட்டால் கண்டிப்பாக நம்புகிறேன். ஐபிஎல் தொடர் முடிந்ததும் வெளியாக உள்ள டி20 உலகக் கோப்பை அணியில் அவர் இருப்பதற்கு தகுதியானவர்”

- Advertisement -

“கடந்த 6 ஐபிஎல் தொடர்களை விட அவர் தற்போது எப்படி விளையாடுகிறார் என்பதை நாம் பார்க்கிறோம். இந்திய கிரிக்கெட்டில் அதிகமான ஆழம் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக தற்போது சில வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இஷான் கிசான் நன்றாக விளையாடுகிறார். சாம்சன், கேஎல் ராகுல் ஆகியோரும் அசத்தலாக விளையாடுகின்றனர்”

இதையும் படிங்க: காமெடி பண்ணாதீங்கன்னு சொல்லிருப்பேன்.. முதல் சதமடிக்க கம்பீர் தான் காரணம்.. சுனில் நரேன் பேட்டி

“எனவே விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய உங்களுக்கு நிறைய தேர்வுகள் தயாராக இருக்கிறது. ஆனால் நான் அணியைத் தேர்வு செய்பவராக இருந்தால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக அசத்தும் பட்சத்தில் ரிஷப் பண்ட் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement