காமெடி பண்ணாதீங்கன்னு சொல்லிருப்பேன்.. முதல் சதமடிக்க கம்பீர் தான் காரணம்.. சுனில் நரேன் பேட்டி

Sunil Narine 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற 31வது லீக் போட்டியில் கொல்கத்தாவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுனில் நரேன் 109 (56) ரன்கள் எடுத்த உதவியுடன் 224 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 19, சஞ்சு சாம்சன் 12, ரியன் பராக் 34, ஹெட்மயர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியான போது எதிர்புறம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோஸ் பட்லர் சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்ஸருடன் 107* (60) ரன்கள் குவித்தார். அதன் காரணமாக கடைசி பந்தில் வென்ற ராஜஸ்தான் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை சமன் செய்தது.

- Advertisement -

பின்னணியில் கம்பீர்:
அதனால் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக 109 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சுனில் நரேனின் போராட்டம் வீணானது. இருப்பினி. ஸ்பின்னராக தம்முடைய கேரியரில் பெரும்பாலும் டெயில் எண்டராக விளையாடிய அவர் தற்போது முதல் முறையாக சதமடித்தது ரசிகர்களை பாராட்ட வைத்தது.

மேலும் பகுதி நேர பேட்ஸ்மேனான அவர் இந்த சீசனில் விராட் கோலி (361), ரியன் பாராக (284) ஆகியோருக்குப் பின் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை நெருங்கி வருகிறார். இந்நிலையில் தம்முடைய முதல் சதத்திற்கும் ஓப்பனிங்கில் சிறப்பாக விளையாடுவதற்கும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக வந்துள்ள கௌதம் கம்பீர் தான் காரணம் என்று சுனில் நரேன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு போட்டியிடுவீர்கள் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் அதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஏனெனில் நான் நீண்ட காலமாக ஓப்பனிங்கில் விளையாடவில்லை. இருப்பினும் அணிக்கு மீண்டும் வந்துள்ள கௌதம் கம்பீர் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளார்”

இதையும் படிங்க: அவரை அடிச்சா ஜெயிக்கலாம்ன்னு காமிச்சேன்.. பட்லருக்காக ரிஸ்க் எடுத்தேன்.. கொல்கத்தாவை விளாசிய போவல் பேட்டி

“அத்துடன் இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பை கொடுப்பதற்கான உறுதியையும் கம்பீர் எனக்கு கொடுத்தார். எனவே 14 போட்டிகளிலும் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு சிறந்த துவக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுப்பதே என்னுடைய வேலையாகும்” என்று கூறினார். அந்த வகையில் சுனில் நரேன் பேட்ஸ்மேனுக்கு அசத்துவதற்கு கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement