அவரை அடிச்சா ஜெயிக்கலாம்ன்னு காமிச்சேன்.. பட்லருக்காக ரிஸ்க் எடுத்தேன்.. கொல்கத்தாவை விளாசிய போவல் பேட்டி

Rovman Powell 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டியில் கொல்கத்தாவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுனில் நரேன் 109 ரன்கள் எடுத்த உதவியுடன் 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 107* ரன்கள் குவித்து கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தார்.

குறிப்பாக ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் எதிர்ப்புறம் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். ஆனால் மறுபுறம் ஆரம்பம் முதல் கடைசி வரை நங்கூரமாக விளையாடிய பட்லர் போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களின் சொந்த சாதனையை ராஜஸ்தான் சமன் செய்தது.

- Advertisement -

ரிஸ்க் எடுத்த போவல்:
முன்னதாக இந்தப்போட்டியில் கடைசி 24 பந்துகளில் 62 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது துல்லியமாக வீசக்கூடிய சுனில் நரேனுக்கு எதிராக 17வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 4, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 16 ரன்களை குவித்த ரோவ்மன் போவல் மொத்தம் 26 (13) ரன்கள் அடுத்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. அதை வீணடிக்காமல் கடைசியில் பட்லர் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்தார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சுனில் நரேனை அடித்தால் நம்மால் வெற்றி பெற முடியும் என்பதை காண்பிப்பதற்காக ரிஸ்க் எடுத்து விளையாடியதாக ரோவ்மன் போவல் கூறியுள்ளார். எனவே நான் அவுட்டானாலும் நீங்கள் ரிலாக்ஸாக இருந்து ஃபினிஷிங் செய்யுங்கள் என்று பட்லரிடம் சொன்னதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டி20 கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை விளையாடும் பெரும்பாலான வீரர்கள் பாராட்டுகளை பெறுவதில்லை. பெரிய இன்னிங்ஸ் விளையாடும் வீரர்களை பற்றி டெக்னாலஜி பல தகவல்களை கொடுக்கும். ஆனால் 10 பந்துகளில் 20 அல்லது 15 பந்துகளில் 30 ரன்கள் அடிக்கும் வீரர்களின் தாக்கத்தை டெக்னாலஜி பேசுவதில்லை. கொல்கத்தாவின் முதன்மை பவுலரான சுனில் நரேனை நான் அடித்து நொறுக்க முயற்சித்தேன்”

இதையும் படிங்க: 224 ரன்கள் அடிச்சி நாங்க ஜெயிக்க இவர்தான் காரணம்.. கூடவே செம லக்கும் இருந்துச்சி – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

“ஏனெனில் அவரை அடித்தால் யார் வேண்டுமானாலும் மற்ற பவுர்களை அடிக்கலாம் என்ற நம்பிக்கையை மற்ற வீரர்களுக்கு கொடுக்க விரும்பினேன். களத்தில் ஜோஸ் பட்லரிடம் “ரிலாக்ஸாக இருங்கள் நான் சில சிக்சர்களை அடிக்கிறேன்” என்று சொன்னேன். ஏனெனில் அவர் தெளிவாக அடிக்க முடியாமல் தடுமாறினார். எனவே நான் சில சிக்ஸர்களை அடிக்க முயற்சித்தேன். அதற்காக “நான் அவுட்டானாலும் நீங்கள் தொடர்ந்து சிக்ஸர்களை அடியுங்கள்” என்று பட்லரிடம் சொன்னேன்” என கூறினார்.

Advertisement