224 ரன்கள் அடிச்சி நாங்க ஜெயிக்க இவர்தான் காரணம்.. கூடவே செம லக்கும் இருந்துச்சி – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. கொல்கத்தா அணியின் சார்பாக சுனில் நரேன் 109 ரன்களையும், ரகுவன்ஷி 30 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்து கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 107 ரன்களையும், ரியான் பராக் 34 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆறு விக்கெட்டுகள் விழுந்து ரோவ்மன் பவல் வந்து இரண்டு சிக்ஸர் அடித்ததும் நாங்கள் போட்டியில் இருப்பதாக உணர்ந்தோம்.

- Advertisement -

அதன் பிறகு ஜாஸ் பட்லர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்தார். அதோடு எங்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. உண்மையிலேயே இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். குறிப்பாக சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இந்த மைதானம் கை கொடுத்தது. இருந்தாலும் ரோவ்மன் பவல் 2 சிக்ஸ் அடிக்க அதன் பின்னர் பட்லர் எங்களுக்கு போட்டியையும் முடித்துக் கொடுத்தார்.

இதையும் படிங்க : கிங் கோலி, கிறிஸ் கெயிலை சாதனைகளை உடைத்த ஜோஸ் பட்லர்.. ஐபிஎல் வரலாற்றில் 3 புதிய அபார சாதனை

கடந்த ஆறு-ஏழு ஆண்டுகளாகவே அவர் இதைத்தான் செய்து வந்தார். அவரது இந்த ஆட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு துவக்க வீரராக களமிறங்கிய பட்லர் 20-தாவது ஓவர் வரை நின்றால் நிச்சயம் எவ்வளவு ஸ்கோராக இருந்தாலும் அதை சேசிங் செய்து இருப்பார் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement