கிங் கோலி, கிறிஸ் கெயிலை சாதனைகளை உடைத்த ஜோஸ் பட்லர்.. ஐபிஎல் வரலாற்றில் 3 புதிய அபார சாதனை

Jos Buttler 4
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ஈடன் கிரிக்கெட் கார்டன்ஸ் மைதானத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற 31வது லீக் போட்டியில் கொல்கத்தாவை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுனில் நரேன் சதமடித்து 109 (56) ரன்கள் எடுத்த உதவியுடன் 224 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆவேஸ் கான் 2, குல்தீப் சென் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதன் பின் சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 19, கேப்டன் சஞ்சு சாம்சன் 12, ரியான் பராக் 34, துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26 என ஒரு பக்கம் முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டானார்கள். ஆனால் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய துவக்க வீரர் ஜோஸ் பட்லர் சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்ஸருடன் 107* (60) ரன்கள் குவித்து கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அபார சாதனைகள்:
அதனால் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் சமன் செய்தது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 7 சதங்கள் அடித்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில் அந்த 7 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வென்றுள்ளது.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக சதங்கள் (7) அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் வெற்றி பெற்ற போட்டிகளில் 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் இதுவரை அடித்த தனது 7 சதங்களில் 3 சதங்களை ஜோஸ் பட்லர் சேசிங் செய்யும் போது அடித்துள்ளார்.

- Advertisement -

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் சாதனையை தகர்த்துள்ள ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சேசிங் செய்யும் போது தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: ஆரம்பத்தில் அதுக்காக கடுப்பாகிட்டேன்.. அப்றம் தோனி, கோலியை ஃபாலோ பண்ணி முடிச்சுட்டேன்.. பட்லர் பேட்டி

அது போக ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற ஜாம்பவான் கிறிஸ் கெயில் வாழ்நாள் சாதனையையும் உடைத்துள்ள ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோஸ் பட்லர் : 7*
2. கிறிஸ் கெயில் : 6
3. டேவிட் வார்னர்/ஷேன் வாட்சன் : தலா 4
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 3

Advertisement