ஆரம்பத்தில் அதுக்காக கடுப்பாகிட்டேன்.. அப்றம் தோனி, கோலியை ஃபாலோ பண்ணி முடிச்சுட்டேன்.. பட்லர் பேட்டி

Jos Buttler 3
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்ற 31வது லீக் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் 2 விக்கெட் வித்யாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 223/6 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் சதமடித்து 109, அங்ரிஸ் ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேச கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். பின்னர் 224 ரன்கள் சேசிங் செய்த கொல்கத்தாவுக்கு ஜெய்ஸ்வால் 19, கேப்டன் சஞ்சு சாம்சன் 12, ரியன் பராக் 34, துருவ் ஜுரேல் 2, அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0 என ஒருபுறம் முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

தோனி, கோலி வழியில்:
ஆனால் எதிர்ப்புறம் நங்கூரமாக விளையாடிய ஜோஸ் பட்லர் 9 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 107* (60) ரன்கள் குவித்து கடைசி பந்தில் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார். அவருடன் கடைசி நேரத்தில் ரோவ்மன் போவல் 26 (13) ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், ஹர்சித் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஆரம்பகட்ட பந்துகளில் அதிரடியாக விளையாட முடியாதது தம்மையே கடுப்பேற்றியதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். ஆனால் நன்கு செட்டிலான தோனி, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களை போல் கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்று வெற்றி பெற முயற்சித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தொடர்ந்து நம்ப வேண்டும் என்பதே இன்றைய வெற்றியின் சாவியாகும். ஆரம்பத்தில் நான் தடுமாறினேன். அது போன்ற நேரத்தில் நீங்கள் கடுப்பாவது போல் உணர்வீர்கள் அல்லது உங்கள் மீது கேள்வி எழுப்புவீர்கள். அப்போது பரவாயில்லை தொடர்ந்து அமைதியாக விளையாடுவோம் என்று எனக்கு நானே சொன்னேன். ஐபிஎல் தொடரில் பல வேடிக்கையான தருணங்கள் நிகழ்ந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்”

இதையும் படிங்க: 224 ரன்ஸ்.. கடைசி பந்தில் கொல்கத்தாவை கில்லியாக சாய்த்த பட்லர்.. சேசிங்கில் ராஜஸ்தான் சரித்திர வெற்றி

“தோனி, கோலி போன்றவர்கள் கடைசி வரை நம்பிக்கையுடன் நின்று ஃபினிஷிங் செய்ததை நாம் பார்த்துள்ளோம். அதையே இன்று நான் பயன்படுத்தினேன். எப்போதும் திருப்புமுனை ஒன்று இருக்கும் என்பது போன்ற நிறைய விஷயங்களை சங்ககாரா என்னிடம் கூறியுள்ளார். உங்களுடைய விக்கெட்டை கொடுக்க போராடாமல் இருப்பதே மோசமான செயல். எனவே கடைசி வரை நின்றால் ஏதோ ஒரு தருணத்தில் போட்டி மாறும் என்று அவர் என்னிடம் சொன்னார். இது என்னுடைய சிறந்த ஐபிஎல் இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அதற்காக திருப்தியடைகிறேன்” என்று கூறினார்.

Advertisement