224 ரன்ஸ்.. கடைசி பந்தில் கொல்கத்தாவை கில்லியாக சாய்த்த பட்லர்.. சேசிங்கில் ராஜஸ்தான் சரித்திர வெற்றி

KKR vs RR
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 31வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் அதிரடியாக விளையாடிய நிலையில் பில் சால்ட் ஆரம்பத்திலேயே 10 ரன்னில் அவுட்டானார்.

அப்போது வந்த அங்ரிஸ் ரகுவன்சி தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்து 30 (18) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 11, ஆண்ட்ரே ரசல் 13 ரன்களில் அவுட்டாகி சென்றனர். ஆனால் எதிர்ப்புறம் அவர்களுக்கும் சேர்த்து ராஜஸ்தான் பவுலர்களை பந்தாடிய சுனில் நரேன் 13 பவுண்டரி 6 சிக்சருடன் 109 (56) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கில்லியாக பட்லர்:
அதன் வாயிலாக 16 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இறுதியில் ரிங்கு சிங் 20* (9) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் செய்ததால் 20 ஓவரில் கொல்கத்தா 223/6 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் மீண்டும் 19 (9) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 12 (8) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அப்போது வந்த ரியன் பராக் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 34 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார்.

அவருக்கு கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி கைகொடுக்க முயற்சித்த ரோவ்மன் போவல் 26 (13) ரன்களில் அவுட்டானதால் கேள்விக்குறியானது. ஆனாலும் எதிர்ப்புறம் தொடர்ந்து கில்லியாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க: டிகே’வுக்கு 2024 டி20 உ.கோ வாய்ப்பு கொடுக்கக்கூடாது.. 3 காரணம் இருக்கு.. ராயுடுவுக்கு இர்பான் பதான் பதிலடி

அதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராகவும் 224 ரன்களை அதிகபட்சமாக ராஜஸ்தான் சேசிங் செய்தது. அதனா; சுனில் நரேன் 2, வருண் சக்கரவர்த்தி 2, ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகள் எடுத்தும் கொல்கத்தா தோல்வியை சந்தித்தது.

Advertisement