டிகே’வுக்கு 2024 டி20 உ.கோ வாய்ப்பு கொடுக்கக்கூடாது.. 3 காரணம் இருக்கு.. ராயுடுவுக்கு இர்பான் பதான் பதிலடி

Irfan Pathan and Rayudu
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவுக்காக 2019 உலகக் கோப்பையில் கடைசியாக சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட அவர் வர்ணனையாளராக மாறினார். ஆனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 2022 சீசனில் பெங்களூரு அணிக்காக 330 ரகளை 183 ஸ்ட்ரைக் கேட்டில் வெளுத்து வாங்கினார்.

அதன் காரணமாக இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் கழற்றி விடப்பட்ட தினேஷ் கார்த்திக் மீண்டும் 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 7 போட்டிகளில் 226* ரன்களை 205.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வருகிறார். அதனால் விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

டிகே வேண்டாம்:
அந்த சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக்கு கடைசி முறையாக இந்தியாவுக்காக விளையாடி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டார். குறிப்பாக தோனிக்கு நிகரான திறமையை கொண்டிருந்தும் அதை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்று ராயுடு தெரிவித்திருந்தார்.

ஆனால் தினேஷ் கார்த்திக் 2024 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படக்கூடாது என்று அதே நிகழ்ச்சியில் ராயுடுவுக்கு முன்னாள் வீரர் இர்பான் பதான் நேரடியாக பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தினேஷ் கார்த்திக்கை நான் கண்டிப்பாக பாராட்டுவேன். அவர் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஆனால் இந்திய அணி மிகவும் வித்தியாசமானது. உலகக்கோப்பை வித்தியாசமான லெவலில் நடக்கும்”

- Advertisement -

“அங்கே ஐபிஎல் போல உங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் இருக்க மாட்டார்கள். உலகக் கோப்பையில் இம்பேக்ட் வீரர் விதிமுறையும் இருக்காது. 11 பேர் மட்டுமே விளையாடுவார்கள். எனவே அங்கே பேட்டிங் செய்வது வித்தியாசமான அழுத்தத்தை கொடுக்கும். பும்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்வதற்கும் மற்றவர்களை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது. அறிமுக பவுலர்களுக்கும் அனுபவ பவுலர்களுக்கும் வித்தியாசம் உள்ளது”

இதையும் படிங்க: 12 – 15 பேருக்கு இங்கிலிஷ் தெரியாது.. முதல்ல அதை மாத்துங்க.. ஆர்சிபி தோல்விக்கான காரணத்தை உடைத்த சேவாக்

“தோனியை போன்ற சாயல் அவரிடம் உள்ளதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் தோனி இல்லாத போது ரிஷப் பண்ட் ஃபார்மில் இல்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்வேன். கார்த்திக்கு பதிலாக நான் சஞ்சு சாம்சனை கருத்தில் கொள்வேன். மற்றொரு வீரர் ஃபார்மில் இருக்கிறார் என்பதற்காக தற்போதுள்ள வீரர்களை நாம் கழற்றி விட முடியாது. ராயுடு சிஎஸ்கே வீரர் என்பதால் மூத்த வீரரை சேர்த்து டாடி ஆர்மியை உருவாக்க நினைக்கலாம். ஆனால் இது இந்திய அணி” என்று கூறினார்.

Advertisement