12 – 15 பேருக்கு இங்கிலிஷ் தெரியாது.. முதல்ல அதை மாத்துங்க.. ஆர்சிபி தோல்விக்கான காரணத்தை உடைத்த சேவாக்

Virender Sehwag 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மகளிர் அணியை போலவே ஆடவர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திணறுகிறது. அதனால் பிளே ஆஃப் செல்வதற்கே அடுத்த 7 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் பெங்களூரு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கடினமாகியுள்ளது.

அந்த அணிக்கு இந்த வருடமும் தினேஷ் கார்த்திக், விராட் கோலி போன்ற வீரர்களால் பேட்டிங் ஓரளவு நன்றாக இருக்கிறது. ஆனால் வழக்கம் போல பேட்ஸ்மேன்கள் போராடி அடிக்கும் ரன்களை பந்து வீச்சில் வாரி வழங்கும் ஆர்சிபி பவுலர்கள் வெற்றியை எதிரணிக்கு பரிசளித்து வருகிறார்கள். குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பெங்களூரு பவுலர்கள் வரலாற்றிலேயே உச்சமாக 287 ரன்கள் வழங்கினர்.

- Advertisement -

சேவாக் கருத்து:
அதை தொடுவதற்கு விராட் கோலி, தினேஷ் கார்த்திக், டு பிளேஸிஸ் முயற்சித்தும் கடைசியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பெங்களூரு அணியில் அனைவருமே வெளிநாட்டு பயிற்சியாளராக இருப்பதே தோல்விக்கு காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்கள் அணியில் 12 – 15 வீரர்கள் இந்தியர்களாகவும் 10 வீரர்கள் வெளிநாட்டவர்களாகவும் இருந்து மொத்த பயிற்சியாளர் குழுவும் வெளிநாட்டவர்களாக இருந்தால் அது பிரச்சனை. அங்கே சிலர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள். மற்றவர்கள் இந்திய வீரர்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆங்கிலமே புரியாது”

- Advertisement -

“அப்படிபட்ட சூழ்நிலையில் எப்படி அவர்களை உங்களால் உத்வேகப்படுத்த முடியும்? எப்படி அவர்களிடம் உங்களால் நேரத்தை செலவிட முடியும்? யார் அவர்களிடம் பேசுவார்கள்? பெங்களூரு அணியில் ஒரு இந்திய பயிற்சியாளரை கூட பார்க்க முடியவில்லை. அங்கே குறைந்தபட்சம் வீரர்கள் நம்பக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும். வீரர்கள் எப்போதும் சௌகரியமான நிலையில் இருக்க வேண்டும். தற்போது அது பெங்களூரு அணியில் இல்லை. அவர்களின் வீரர்கள் அனைவரும் கேப்டன் டு பிளேஸிஸ் முன்னாள் காலியாக செல்கின்றனர்”

இதையும் படிங்க: நண்பேன்டா.. எப்போவுமே தோனியுடன் துணை நிற்கும் சின்னதல ரெய்னா – நெகிழ்வைத்த காட்சி

“ஏனெனில் ஒருவேளை கேப்டன் எதையும் கேட்டால் அந்த வீரர்கள் ஆங்கிலத்தில் பதில் கொடுக்க வேண்டும். ஒருவேளை இந்தியர் கேப்டனாக இருந்தால் அந்த வீரர்கள் தங்களுடைய மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை ஒரு வெளிநாட்டு கேப்டனிடம் சொல்லும் போது சரியான புரிதல் இல்லாமல் அடுத்த போட்டியில் நீங்கள் பிளேயிங் லெவனில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஆர்சிபி அணியில் குறைந்தது 2 – 3 இந்தியர்கள் துணை பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement