நண்பேன்டா.. எப்போவுமே தோனியுடன் துணை நிற்கும் சின்னதல ரெய்னா – நெகிழ்வைத்த காட்சி

Dhoni-and-Raina
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகிய மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி ரசிகர்களின் அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று அறிவித்ததால் இந்த ஆண்டு அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது.

அதனால் ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. அதேபோன்று இந்தியாவில் எந்த இடத்தில் நடைபெறும் போட்டிகளாக இருந்தாலும் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு மைதானத்திலும் தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் மைதானத்திற்கு நேரில் படை எடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதன் காரணமாக தன்னால் முடிந்தவரை தோனி களத்தில் இறங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய தல தோனி கடைசி ஓவரின் போது பேட்டிங் செய்ய களத்திற்கு வந்து ஹார்டிக் பாண்டியா வீசிய கடைசி நான்கு பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் மற்றும் ஒரு இரண்டு ரன்கள் என 20 ரன்களை குவித்து அட்டகாசப்படுத்தினார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக சென்னை அணி 206 ரன்கள் குவித்தது மட்டுமின்றி அந்த போட்டியிலும் வெற்றி பெற தோனியின் இன்னிங்ஸ் மிக முக்கியமானதாக அமைந்தது. தோனியின் இந்த அதிரடியை பார்த்த ரசிகர்கள் மேலும் அவர் இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டி முடிந்து அடுத்ததாக லக்னோவிற்கு புறப்பட்ட சென்னை அணியினர் அங்கிருந்து கிளம்பும்போது நடைபெற்ற ஒரு நிகழ்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு முழங்கால் வலியால் பாதிக்கப்பட்ட தோனி இம்முறையும் சற்று கால் வலி இருந்தாலும் ரசிகர்களுக்காக தொடர்ந்து விளையாடு வருகிறார்.

இவ்வேளையில் மும்பையில் தாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் கையைப் பிடித்துக் கொண்டு படிக்கட்டில் இறங்கிய தோனி பின்னர் சிஎஸ்சி அணியின் பேருந்தில் ஏறுகிறார். ஓய்வு பெற்றாலும் தனது நண்பரான ரைய்னாவின் கையை பிடித்து தாங்கியபடி படியில் இறங்கிய தோனி சிரித்தபடியே பேருந்தில் ஏறினார்.

Advertisement