- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர்களாக அந்த 2 பேரும் தான் விளையாடனும் – ரிக்கி பாண்டிங் கருத்து

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைமுறை இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர்களான அஸ்வின், விராட் கோலி ஆகிய மூன்று மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகளும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் தற்போது இந்திய அணி சவாலான நேரத்தை எதிர்கொள்ளவுள்ளது.

துவக்க வீரர்களாக அந்த 2 பேரும் தான் விளையாடனும் : ரிக்கி பாண்டிங்

இந்த முப்பெரும் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதேவேளையில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியானது இம்முறை இங்கிலாந்து மண்ணில் சாதிக்க வாய்ப்புள்ளது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் :

- Advertisement -

சுப்மன் கில்லை இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்தது சரிதான் என்றும் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். அதோடு இந்திய அணியின் துவக்க வீரர்களாக இந்த இங்கிலாந்து தொடரில் யார் களமிறங்க வேண்டும்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒருவர் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால் அவர் அதிகளவு ரன்களை அடிக்க வேண்டும்.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக கேப்டன்சி செய்ததோடு மட்டுமின்றி அதிகளவு ரன்களையும் சுப்மன் கில் குவித்துள்ளார். எனவே இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டது சரிதான். அதேபோன்று ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கும் வேளையில் துவக்க வீரர்களுக்கான ஜோடி வலிமையான ஒரு ஜோடியாக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கையில் :

- Advertisement -

ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் களமிறங்கினால் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே ஜெய்ஸ்வால் தனது திறமையை நிரூபித்து விட்டார். அதேவேளையில் சாய் சுதர்சன் ஐபிஎல் போட்டி மற்றும் உள்ளூர் தொடர் என தனது சிறப்பான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பார் என்று நம்புகிறேன். அதனால் ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சனே துவக்க வீரராக களமிறங்க வேண்டும்.

இதையும் படிங்க : பும்ரா 5 போட்டியிலும் விளையாடும்னா அதுக்கு ஒரு வழி இருக்கு.. ஐடியா குடுத்த பரத் அருண் – விவரம் இதோ

அதேபோன்று அனுபவ வீரர்களான கே.எல் ராகுல் அல்லது கருண் நாயர் ஆகிய இருவரில் ஒருவர் மூன்றாவது இடத்திலும் நான்காவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்கினால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -