IND vs AUS : இந்த மாதிரி பிட்ச்ல எப்படி சதமடிச்சு பார்முக்கு வரமுடியும்? நட்சத்திர இந்திய வீரரின் விமர்சனங்களுக்கு பாண்டிங் பதிலடி

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா 3வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோன்றது. அதனால் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ள விராட் கோலி கடந்து 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை 2022 ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கினார்.

Virat Kohli 46

- Advertisement -

அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அசத்திய அவர் சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு சதமடித்திருந்த அவர் விரைவில் அந்த கதைக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

பாண்டிங் ஆதரவு:
குறிப்பாக கடைசியாக 2022 ஜனவரியில் அரைசதம் அடித்திருந்த அவர் கடந்த ஒரு வருடமாக 15 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் 55 என்றளவுக்கு அற்புதமாக இருந்த அவருடைய பேட்டிங் சராசரி தற்போது 48.12 என மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நல்ல வாய்ப்பு கிடைத்த இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் 111 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் மீண்டும் விராட் கோலிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன.

kohli 1

இந்நிலையில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலிருந்தே தாறுமாறாக சுழலும் பிட்ச்களை கொண்ட இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் யாராலும் சதமடித்த பார்முக்கு திரும்ப முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். எனவே விராட் கோலி போன்ற சாம்பியன் வீரர் நிச்சயமாக விரைவில் பெரிய ரன்களை குவிப்பார் என்பதால் அவருடைய பார்ம் பற்றி தாம் கவலைப்படவில்லை என்று தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த தொடரில் எந்த பேட்ஸ்மேன்களின் பார்ம் பற்றியும் நான் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்தத் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் மோசமாக தூங்காத இரவுகளை கொடுத்துள்ளது. இது போன்ற தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோற்ற பின்பும் 3வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா வென்றுள்ளது அபாரமானது. இந்த தொடரில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு காரணம் பந்து சுழல்வதுடன் சமமற்ற பவுன்ஸ் இருப்பதால் பந்து எப்படி வரும் என்பதை பற்றி உங்களால் இந்த பிட்ச்சில் நம்பி எதையும் கணிக்க முடியாது. அதனால் தான் இங்கே பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும்”

Ponting

“இதை பலமுறை நான் சொல்லியுள்ளேன். அதாவது விராட் கோலி போன்ற சாம்பியன் வீரர்கள் எப்படியாவது ஃபார்முக்கு திரும்பும் வழியை கண்டறிந்து விடுவார்கள். தற்சமயத்தில் வேண்டுமானால் அவர் தடுமாறி ரன்களை குவிக்க முடியாமல் இருக்கலாம். பொதுவாக அவரைப் போன்ற தரமான வீரர் அனைத்துப் போட்டிகளிலும் ரன்கள் அடிப்பார் என்று நாம் எதிர்பார்ப்போம்”

இதையும் படிங்க:மகளிர் ஐபிஎல் : வெறித்தன பினிஷிங் செய்த கிரேஸ் ஹாரீஸ், தோனியை பேட்டில் வைத்து குஜராத்தை பந்தாடிய இளம் வீராங்கனை

“ஆனால் அவரும் இந்த நிதர்சன உலகைச் சேர்ந்தவர். அதாவது ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்கள் அடிக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும். இருப்பினும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில் அவரால் இதிலிருந்து மீண்டெழுந்து கம்பேக் கொடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement