டி20 கிரிக்கெட்டில் புதுசா கண்டுபிடிப்பதில் அவர மாதிரி ப்ளேயரை பார்த்ததில்லை – இந்திய வீரருக்கு ரிக்கி பாண்டிங் பாராட்டு

Ponting
- Advertisement -

2022 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்துள்ள அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. அந்த விருது பட்டியலில் ஆடவர் கிரிக்கெட்டில் தனி நபர் பிரிவில் சூரியகுமார் யாதவ் மட்டுமே விருது வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். தாமதமாக 30 வயதில் கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எவ்வளவு கடினமான பந்து வீச்சாளர் எப்படி பந்து வீசினாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

SUryakumar Yadav 112

- Advertisement -

அதை விட எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்ற வகையில் பெரும்பாலான போட்டிகளில் பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை லாவகமாக மைதானத்தின் நாலா புறங்களிலும் பவுண்டரிகளும் சிச்சர்களுமாக தெறிக்க விடும் அவருடைய பேட்டிங்கை பார்த்து வியக்காதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக விக்கெட் கீப்பர் நிற்கும் பின் திசையில் அசால்டாக சிக்சர்களை பறக்க விடும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை மிஞ்சிய யுனிவர்சல் பாஸ் என்றும் ரிச்சர்ட்ஸ், சச்சின் வரிசையில் நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் வீரர் என்றும் நிறைய முன்னாள் வீரர்கள் மனதார பாராட்டினர்.

புதிய கண்டுபிடிப்பு:
மேலும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி உள்ளிட்ட இதர இந்திய வீரர்களை மிஞ்சி லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறிய அவர் 2022இல் உலக அளவில் அதிக ரன்கள் (1164) குவித்த வீரராக சாதனை படைத்தார். அதனால் 2022ஆம் ஆண்டின் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை வென்ற அவரிடம் இருக்கும் நுணுக்கங்களை வரலாற்றில் வேறு யாரிடமும் பார்த்ததில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். குறிப்பாக நினைத்துப் பார்க்க முடியாத புதுப்புது ஷாட்களை கண்டுபிடிப்பதில் சூரியகுமார் வல்லவராக திகழ்வதாக தெரிவித்திருக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

Suryakumar Yadav 1

“புதுமை மற்றும் திறமை வாரியாக இந்த விளையாட்டில் சூர்யகுமாரை விட சிறந்த வீரரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் அவர் செய்வதை உலக அளவில் இருக்கும் இதர வீரர்கள் தங்களது ஆட்டத்தில் செய்ய நினைக்கிறார்கள். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் அது மற்றும் ஒரு நுணுக்கத்தை உருவாக்குகிறது. 2022 ஐபிஎல் தொடரின் போது சூரியகுமார் என்ன செய்கிறாரோ அதை விரைவில் இதர வீரர்களும் செய்வார்கள் என்று ஒருவர் கூறினார். தற்போது அப்படி நடப்பது விளையாட்டுக்கு மிகவும் சிறப்பான ஒன்றாகும்”

- Advertisement -

“சொல்லப்போனால் வரலாற்றில் சில வீரர்கள் செய்ததை விட அவர் தற்சமயத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பொதுவாக 360 டிகிரியிலும் அடிக்கும் பேட்ஸ்மேன்களை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் விக்கெட் கீப்பருக்கு பின் திசையிலும் பைன் லெக் திசைக்கு மேலும் சூரியகுமார் அடிக்கும் ஷாட்டுகள் மிகவும் அபாரமாக உள்ளது. இதை 5 – 6 வருடங்களுக்கு முன்பாக அவர் ஐபிஎல் தொடரில் செய்ய துவங்கினார். அவர் டீப் பேக்வார்ட் ஸ்கொயர் திசையில் பிளிக் ஷாட் அடிப்பதிலும் பைன் லெக் திசைக்கு மேல் அடிப்பதிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்”

Ricky-Ponting

“தற்போது அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை கீப்பர் தலைக்கு மேல் எளிதாக அடிக்க முடிகிறது. அந்த பந்துகள் பவுண்டரியை தாண்டி அசால்டாக சிக்ஸர்கள் பறக்கின்றன. உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர் இந்தளவுக்கு வருவார் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: IND vs NZ : இவரும் சரிப்பட்டு வரமாட்டாரு, பேசாம பிரிதிவி ஷா’க்கு சான்ஸ் கொடுங்க – புள்ளி விவரத்துடன் ரசிகர்கள் கோரிக்கை

“இதற்காக அவர் ஆட்டத்திலும் தனது உடலிலும் கடினமாக உழைத்து தேவையான வடிவத்தை ஏற்படுத்தியுள்ளார். மிகவும் பிட்டாக இருக்கும் அவரைப் போலவே இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நிறைய இளம் வீரர்கள் பிட்டாக இருக்கிறார்கள்” என்று பாராட்டினார்.

Advertisement