IND vs NZ : இவரும் சரிப்பட்டு வரமாட்டாரு, பேசாம பிரிதிவி ஷா’க்கு சான்ஸ் கொடுங்க – புள்ளி விவரத்துடன் ரசிகர்கள் கோரிக்கை

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதியன்று ராஞ்சியில் துவங்கிய இத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 176/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் பின் ஆலன் 35, டேவோன் கான்வே 52 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் டார்ல் மிட்சேல் அதிரடியாக 59* ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 177 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 4, சுப்மன் கில் 7, ராகுல் திரிபாதி 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி தோல்வியை உறுதி செய்தனர். ஏனெனில் அதனால் 15/3 என சரிந்த இந்தியாவை 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய சூரியகுமார் யாதவ் 47 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 21 ரன்கள் எடுத்தாலும் ரன்ரேட் எகிறிய அழுத்தத்தில் அவுட்டானார்கள்.

- Advertisement -

இவர் சரிப்பட்டு வரமாட்டார்:
மேலும் அடுத்து வந்த தீபக் ஹூடா 10 ரன்னில் அவுட்டாகி சென்றதால் தோல்வி உறுதியான இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 50 (28) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். இறுதியில் இந்தியாவை 155/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் அர்ஷிதீப் சிங் உள்ளிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினாலும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

அதனால் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு தெளிவாக தெரிந்தது. அதன் காரணமாக நியூசிலாந்து ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டிய இந்திய டாப் ஆர்டரில் இஷான் கிசான், சுப்மன் கில் ஆகியோர் பொறுப்பின்றி ஆட்டமிழந்தது இந்தியாவின் தோல்விக்கு பேட்டிங் துறையில் முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக தனது சொந்த ஊரான ராஞ்சியில் விளையாடிய இசான் கிசான் அந்த மைதானம் எப்படி இருக்கும் என்பதை இதர இந்திய வீரர்களை விட தெளிவாக தெரிந்தும் மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய 2வது ஓவரில் க்ளீன் போல்ட்டாகி சென்றார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அதிரடியாக செயல்பட்டு இந்தியாவுக்காக 2021இல் அறிமுகமாகி முதல் போட்டியில் அரை சதமடித்த அவர் 2022 ஐபிஎல் சீசனில் பார்மை இழந்து மோசமாக செயல்பட்டது மும்பை கடைசி இடத்தை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அதன் பின் நடைபெற்ற தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் பார்முக்கு திரும்பி அசத்திய இவர் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்து மிரட்டினார்.

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே செயல்படும் இவர் கடைசி 12 போட்டிகளில் முறையே 4, 1, 2, 37, 10, 36, 11, 8, 3, 26, 15, 27 என ஒரு அரை சதம் கூட அடிக்காமல் படு மோசமாக செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்காக ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு பெறுவதற்கே பல வீரர்கள் திண்டாடும் நிலையில் 12 போட்டிகளில் வாய்ப்பு பெற்றும் ஒரு அரை சதம் கூட அடிக்காத இவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் 550 நாட்கள் கழித்து மீண்டும் போராடி இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள பிரிதிவி ஷா’க்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

இதையும் படிங்க: IND vs NZ : ஆல் ரவுண்டராக போராடிய வாஷிங்டன் சுந்தர் – வேறு எந்த இந்திய வீரரும் படைக்காத தனித்துவமான வரலாற்று சாதனை

ஏனெனில் 2020/21இல் சுமாராக செயல்பட்டு கழற்றி விடப்பட்ட பிரிதிவி ஷா சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் டி20 தொடரில் அசத்தலாக செயல்பட்டு தனது உடல் எடையை குறைத்து நீண்ட நாட்கள் போராடி மீண்டும் தேர்வாகியுள்ளார். எனவே வாய்ப்பின் அருமையை தற்போது நன்கு உணர்ந்துள்ள அவர் நல்ல பார்மில் இருப்பதால் இதுவே வாய்ப்பு கொடுப்பதற்கான சரியான நேரம் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement