ஸ்ரேயாஸ் ஐயர் கண்ணில் இதை பாருங்க.. மிஸ் பண்ண பிசிசிஐ’க்கு இந்த பதிலடி தருவாரு.. பாண்டிங் ஏமாற்றம்

Ricky Ponting
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் எதிர்கொள்கிறது. இந்த வருடம் 26.75 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த வாய்ப்பில் 603* ரன்களை குவித்துள்ள அவர் பேட்ஸ்மேனாக வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

அதை விட கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்படும் அவர் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று சாதனைப் படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கண்களில் வெற்றிக்கான பசி:

குறிப்பாக ஸ்ரேயாஸ் கண்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பசி இருப்பதாக பாண்டிங் கூறியுள்ளார். அதே சமயம் தம்மைக் கழற்றி விட்ட பிசிசிஐ’க்கு ஐபிஎல் கோப்பையை வென்று பதிலடியைக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஸ்ரேயாஸ் விளையாடி வருவதாகவும் பாண்டிங் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“உண்மையில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால் ஸ்ரேயாஸ் அதை ஏற்றுக்கொண்டு கடந்து சென்று விட்டார். அவருடைய கண்களில் பஞ்சாப் அணிக்காக இங்கே ஒவ்வொரு முறையும் விளையாடும் போது சிறப்பாக செயல்பட்டு போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்ற பசி நன்றாகத் தெரிகிறது. அதே போல சிறந்த கேப்டனாக முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கண்களில் இருக்கிறது”

- Advertisement -

பாண்டிங் கருத்து:

“உள்ளூரில் சிறப்பாக விளையாடி ஐபிஎல் தொடரிலும் அசத்தியதன் காரணமாக இதர வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஸ்ரேயாஸ் ஐயரும் அதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அப்படியிருந்தும் அவரைத் தேர்வு செய்யாதது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. உண்மையில் அவர் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவார் என்று நான் நினைத்தேன்”

இதையும் படிங்க: மும்பையின் 6வது கோப்பையை உடைச்சது நீங்க தான்.. பும்ரா, ரோஹித்துக்கு தெரியாதா? ஹர்பஜன் விளாசல்

“இருப்பினும் அவர் எந்த ஏமாற்றத்தையும் சந்திக்கவில்லை. சொல்லப்போனால் இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்யப்படாத அவரிடம் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பசியை இன்னும் அதிகமாக தூண்டியுள்ளது என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து பெங்களூருவை தோற்கடித்து பஞ்சாப் முதல் கோப்பையை வெல்லத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement