ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அதனால் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டியில் விளையாட பஞ்சாப் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இதை அடுத்து ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள பஞ்சாப் தகுதி பெற்றது.
மறுபுறம் தோல்வியைச் சந்தித்த மும்பை 6வது கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் மும்பை அணியின் இந்தத் தோல்விக்கு அதனுடைய பயிற்சியாளர்கள் மகிளா ஜெயவர்தனே, லசித் மலிங்கா தான் காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். ஏனெனில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து மும்பைக்கு சவாலைக் கொடுத்தார்.
கெடுத்த பயிற்சியாளர்கள்:
அப்போது பவுண்டரி எல்லை அருகே நின்றுக்கொண்டு அவர்கள் இருவரும் மும்பை பவுலர்களுக்கு பதற்றத்தை உருவாக்கும் வகையில் அடிக்கடி தேவையற்ற ஆலோசனைகளை கொடுத்ததாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தரமான பவுலருக்கே தேவையற்ற ஆலோசனைகளைக் கொடுத்த மும்பை பயிற்சியாளர்கள் குழப்பி விட்டதாக ஹர்பஜன் கூறியுள்ளார். மேலும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா, பும்ராவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா? என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை இந்தியன்ஸ் பெவிலியனை பாருங்கள். மும்பை பவுலர்கள் ரன்களை கொடுக்கும் போது வெளியிலிருந்து நிறைய ஈடுபாடு வருகிறது. பும்ரா போன்ற பவுலருக்கு கூட என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை பயிற்சியாளர்கள் சொல்கிறார்கள். உண்மையில் ஒரு அணியின் உடைமாற்றும் அறை அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்”
ஹர்பஜன் விளாசல்:
“பயிற்சியாளர்கள் ஆலோசனைகளை மட்டுமே கொடுக்க வேண்டும். அவநம்பிக்கையை காட்டக்கூடாது. அவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்களுடைய வீரர்களின் போட்டித் தன்மையை உடைக்கிறீர்கள். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிகப்பெரிய வீரர்கள். அணியின் வெற்றிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் முடிவை அவர்களிடமே கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: “ப்ளீஸ் என் கண் முன்னாடி நீ வராத” மும்பையை வீழ்த்திய பிறகு ஷஷாங்க் சிங்கை விரட்டிய – ஷ்ரேயாஸ் ஐயர்
“அவர்கள் ஒன்றாக நிறைய கோப்பைகளை வென்றுள்ளார்கள். அவர்களுக்கு பயிற்சியாளராக உங்களுடைய நம்பிக்கை மட்டுமே தேவை. ஆனால் இங்கே பயிற்சியாளர்கள் மைதானத்தின் ஓரத்தில் நின்று கொண்டு தங்களுடைய கைகளால் சைகைகளைக் காட்டுகிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த போட்டியில் ஜெயவர்தனே பேச்சைக் கேட்காமலேயே பும்ரா வெற்றி பெற வைத்தார். மொத்தத்தில் கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த மும்பை இம்முறை ஃபைனல் வரை நெருங்கி நல்ல முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



