ஸ்ரேயாஸை நான் தான் 26.75 கோடிக்கு எப்படியாவது வாங்க சொன்னேன்.. காரணம் இதான்.. பாண்டிங் பேட்டி

Ricky Ponting
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் கனவு கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் விளையாட உள்ளது. வரலாற்றில் எப்போதுமே தொடர்ந்து சிறப்பாக விளையாடாத அந்த அணி இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் 2 உலகக்கோப்பைகளை வென்ற ஜாம்பவான் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கும் பஞ்சாப் வாங்கியுள்ளது. 2024 – 25 சயீத் முஷ்டாக் அலி கோப்பையை மும்பையின் கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

எப்படியாவது வாங்குங்க:

எனவே இம்முறை அவரது தலைமையில் பஞ்சாப் கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. இந்நிலையில் 2018, 2019, 2020 ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் திறமைகளைக் கண்டறிந்ததாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அதனால் அவரை வைத்து பஞ்சாப் அணிக்கு கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அதனாலேயே கோடிகளைப் பார்க்காமல் அவரை எப்படியாவது வாங்குமாறு சொன்னதாகவும் பாண்டிங் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயருடன் எப்படியாவது மீண்டும் வேலை செய்ய நான் தீவிரமாக இருந்தேன். டெல்லி அணியில் விளையாடிய போது நாங்கள் நீண்ட காலமாக சிறந்த உறவைக் கொண்டிருந்தோம்”

- Advertisement -

கேப்டன் – பயிற்சி பிணைப்பு:

“நான் பயிற்சியாளராக வேலை செய்த வீரர்களில் ஸ்ரேயாஸ் ஒரு சிறந்த வீரர். நல்ல மனிதரான அவர் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன். இதற்கு மேலும் அவரிடம் நீங்கள் எதையும் கேட்க முடியாது. சில நாட்களுக்கு முன்பாக எங்களுடன் இணைந்த அவர் கேப்டனாக தனது அணியை உருவாக்கும் வேலையைத் துவங்கியுள்ளார்”

இதையும் படிங்க: இந்தக் கொடுமையை கேளுங்க.. பாகிஸ்தான் தோற்கனும்ன்னு எங்க நாட்டிலயே காத்திருக்காங்க.. ஹரிஷ் ரவூப் வேதனை

“நாங்கள் ஒன்றாக சேர்ந்து சிறந்த அணியை உருவாக்கி வருகிறோம். எந்த ஒரு அணியிலும் கேப்டன் பயிற்சியாளர் தொடர்பு வெற்றிக்கு முக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியும். அது போன்ற சூழ்நிலையில் நாங்கள் மிகவும் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளோம்” என்று கூறினார். அதே போல பாண்டிங்குடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்வது மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். அவரது உதவியுடன் இந்தத் தொடரில் அசத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement