- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த எல்லாத்தையும் சாதிச்ச கர்வம் இல்லாத விராட் கோலி.. 2027 உ.கோ வாய்ப்பை பிடிப்பாரு.. பாண்டிங் பேட்டி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பெரிய ரன்கள் எடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. குறிப்பாக விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அதே போல தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். ஏற்கனவே டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகிறார்கள். அடுத்ததாக 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பதே அவர்களுடைய திட்டமாக இருக்கிறது.

- Advertisement -

கர்வம் இருக்காது:

இருப்பினும் அதற்கு முன்பாக அவர்களை தேர்வுக்குழு கழற்றி விடும் முயற்சிகளைத் துவங்கியுள்ளது. அதன் முதல் படியாக ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி (2013, 2025), உலகக் கோப்பை (2011), டி20 உலகக் கோப்பை (2024) ஆகிய அனைத்து ஐசிசி கோப்பைகளையும் விராட் கோலி வென்றுள்ளார்.

அத்துடன் 27000+ ரன்கள் 82 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட அனைத்தையும் சாதித்துள்ளார். இருப்பினும் அனைத்தையும் சாதித்து விட்டோம் என்ற கர்வம் இல்லாத விராட் கோலி இங்கிருந்து போராடி 2027 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பிடிப்பார் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பாண்டிங் நம்பிக்கை:

“இந்த விளையாட்டில் அனைத்தையும் சாதித்து விட்டேன் என்று யாரும் சொல்வதை நான் விரும்ப மாட்டேன். நீங்கள் அனைத்தையும் சாதித்தாலும் குறுகிய கால இலக்கை வைத்திருப்பீர்கள். அது 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது மட்டுமாக இருக்காது. விராட் கோலி எப்போதும் ஊக்கமிக்க நபராக திகழ்கிறார்”

இதையும் படிங்க: பிஜிடி பேய் இன்னும் விராட் கோலியை விடல.. ஆஸியில் இந்தியா வெல்வது கஷ்டம் தான்.. பதான் பேட்டி

“தற்சமயத்தில் அவர் அமர்ந்து தமக்குத் தாமே சில இலக்கை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். அடுத்த உலகக் கோப்பை வரும் வரை காத்திருந்து நேரத்தைக் கொள்வதற்கு பதிலாக அவர் ஆஸ்திரலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரில் சாதிப்பதற்கான விஷயங்களில் கவனம் செலுத்துவார்” என்று கூறினார். இதற்கிடையே 2027இல் 40 வயதாகும் ரோஹித்தை விட 38 வயதாகக்கூடிய விராட் கோலி விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -