ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அப்போட்டியில் இந்தியாவுக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 224 நாட்கள் கழித்து களமிறங்கியதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறிது.
கடைசியாக இதே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடிய அவர்கள் இந்தியாவின் தோல்விக்கு காரணமானார்கள். அதனாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களை தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ஓய்வை அறிவித்த அவர்கள் இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ளனர்.
பிஜிடி பேய்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிக்குப் பின் 7 மாதங்கள் கழித்து இத்தொடரில் களமிறங்கிய ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக டக் அவுட்டானார். இந்நிலையில் கடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பிடித்த பேய் இன்னும் விராட் கோலியை துரத்துவதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அத்தொடரில் அவுட்டானத்தை போல இத்தொடரின் முதல் போட்டியிலும் விராட் கோலி அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் அவுட்டானார். இது பற்றி பதான் பேசியது பின்வருமாறு. “ஃபிட்னஸ் என்பது ஒரு விசயம். போட்டி நேரத்தைப் பெறுவது மற்றொரு விஷயம். அதனாலேயே ரோஹித் கொஞ்சம் திண்டாடுவது போல் தெரிகிறார்”
விராட் கோலியை இன்னும் விடல:
“பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் (பிஜிடி) பிடித்த பேய் விராட் கோலியை மீண்டும் பிடித்துள்ளது போல் தெரிகிறது. அது அடுத்த 2 போட்டிகளில் இருக்காது என்று நான் நம்புகிறேன். கேஎல் ராகுல் முதல் போட்டியில் நன்றாக பேட்டிங் செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் வினோதமாக அவுட்டானார். அவர் கொஞ்சம் தன்னுடைய டெக்னிக்கில் வேலை செய்ய வேண்டும். தமக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அக்சர் பட்டேல் ஓரளவு நன்றாகவே செயல்பட்டுள்ளார்”
இதையும் படிங்க: 4 பந்தில் 4 விக்கெட்ஸ்.. இலங்கையிடம் இந்தியாவை விட முரட்டு சோக்கராகி வீட்டுக்கு கிளம்பிய வங்கதேசம்
“ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் விளையாடும் போது நீங்கள் கொஞ்சம் முன்னதாகவே சென்று சில போட்டிகளில் விளையாடுவது நல்லது. இத்தொடர் இந்தியாவுக்கு கடினமாக இருக்கும். ஏனெனில் அங்குள்ள சூழ்நிலைகள் எளிதாக இருக்காது. நம்முடைய பவுலர்களால் சரியான லென்த்தை பிடிக்க முடியவில்லை. பேட்ஸ்மேன்கள் பவுன்ஸை சமாளிக்க முடியாமல் திணறினார்கள். நீங்கள் விளையாடியிந்தால் இந்தத் தவறுகள் நடந்திருக்காது” என்று கூறினார்.



