2019லிருந்தே தெரியும்.. இதனால தான் ஸ்ரேயாஸை 26.75 கோடிக்கு வாங்குனோம்.. பஞ்சாப் சாதிக்கும்.. பாண்டிங் பேட்டி

Ricky Ponting
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் 5 முறை சாம்பியன் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அதனால் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு பஞ்சாப் தகுதி பெற்றுள்ளது.

அந்த அணியின் இந்த வெற்றிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார். 26.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட அவர் பேட்டிங்கில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வெற்றியில் பங்காற்றி வருகிறார். அதே போல கேப்டனாக சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக வழி நடத்தும் அவரது தலைமையில் பஞ்சாப் தங்களுடைய முதல் கோப்பையை நெருங்கி வருகிறது.

- Advertisement -

2019 முதலே தெரியும்:

இந்நிலையில் 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் பயிற்சியாளராக இருந்த போதே ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் திறமையை தெரிந்து கொண்டதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதனாலேயே இம்முறை பல கோடிகள் செலவானாலும் பரவாயில்லை அவரை வாங்குமாறு பஞ்சாப் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதாக பாண்டிங் கூறியுள்ளார். தங்களுடைய தலைமையில் பஞ்சாப் முதல் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையைத் தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ஐயருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்வதில் நான் ஆர்வத்துடன் இருந்தேன். அதற்காக ஏலத்தில் அவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க தயாராக இருக்கிறேன் என்பதிலும் தெளிவு இருந்தது. டெல்லி அணியில் இருந்த போது எங்களுக்கிடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவருடைய தலைமையில் டெல்லி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது”

- Advertisement -

இன்னும் சாதிக்கல:

“அந்த வகையில் ஒரு வீரராகவும் நபராகவும் அவரை நான் நீண்ட காலம் அறிந்திருக்கிறேன். அவர் மிகவும் தரமான வீரர். நீங்கள் பஞ்சாப் போன்ற அணியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் அதற்கு தரமான நபர்களைச் சுற்றி புதிய கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதுவே உங்களுக்கு தேவை. எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஸ்ரேயாஸ் பற்றி நல்ல அபிப்பிராயத்தைக் கொடுப்பார்கள். ஏனெனில் அவர்களுடன் அவர் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார்”

இதையும் படிங்க: லக்னோ அணிக்கெதிரான போட்டியின் மூலம் டி20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் – விராட் கோலி

“அவர்களுக்கு அவர் தேவைப்படும் நேரத்தில் உத்வேகத்தைக் கொடுக்கிறார். அதுவே நல்ல லீடருக்கான அறிகுறி. எங்களுடைய கடின உழைப்பு இது போன்ற நல்ல வெற்றிகளைக் கொடுக்கிறது. நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் ஒரே பாதையில் செல்கிறோம். இதுவரை நாங்கள் உண்மையாக எதையும் சாதிக்கவில்லை. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கோப்பையை வெல்வதே உண்மையான சாதனை என்று எங்கள் வீரர்களிடம் நான் கூறியுள்ளேன்” எனக் தெரிவித்தார்.

Advertisement