லக்னோ அணிக்கெதிரான போட்டியின் மூலம் டி20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் – விராட் கோலி

Kohli
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆர்.சி.பி அணிக்காக மட்டும் 264 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 256 இன்னிங்ஸ்களில் 8 சதம் மற்றும் 62 அரைசதம் என 8552 ரன்களை குவித்துள்ளார். தற்போது 36 வயதாகும் அவர் இந்த ஆண்டு தனது 18-வது சீசனில் விளையாடி வரும் வேளையில் இந்த ஆண்டு அவருக்காக ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி அணி கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் விராட் கோலி :

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரிலும் வழக்கம் போலவே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி இதுவரை தான் விளையாடியுள்ள 12 இன்னிங்ஸ்களில் 548 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்று மே 27-ஆம் தேதி லக்னோ அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி லீக் போட்டியில் விளையாட இருக்கும் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் :

ஐ.பி.எல் போட்டிகளில் ஆர்.சி.பி அணிக்காக மட்டும் விளையாடி வரும் அவர் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ஆகியவற்றை சேர்த்து இதுவரை 270 இன்னிங்ஸ்களில் விளையாடி 8976 ரன்களை குவித்துள்ளார். அதில் 8 சதம் மற்றும் 64 அரைசதங்கள் அடங்கும். அதோடு அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 113 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் மேலும் 24 ரன்களை குவிக்கும் பட்சத்தில் ஆர்.சி.பி அணிக்காக மட்டும் டி20 போட்டிகளில் 9000 ரன்களை குவித்த வீரராக சாதனையை நிகழ்த்த இருக்கிறார்.

இதையும் படிங்க : ரோஹித், கோலி 2027 உலகக் கோப்பை வரை இதை மெய்ன்டன் செய்து ஈஸியா ஆடமுடியாது.. அனில் கும்ப்ளே

அதிலும் குறிப்பாக இப்படி ஒரே அணிக்காக 9000 டி20 ரன்களை எந்தவொரு வீரரும் அடிக்காத வேளையில் அதனை நிகழ்த்தி காட்டும் முதல் வீரராக இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement