- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிச்சயமாக ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இதை செய்வாங்க.. அவங்க சாம்பியன்ஸ் – ரிக்கி பாண்டிங் கருத்து

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வியை அறிவித்த அவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.

ரோஹித் மற்றும் விராட் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள் : ரிக்கி பாண்டிங்

இதன் காரணமாக இந்த ஆஸ்திரேலியா தொடரானது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள தொடராக மாறியுள்ளது. இருப்பினும் இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக அவர்களால் எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடரில் விளையாட முடியுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஜாம்பவான் வீரர்களான அவர்கள் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் அடுத்த உலக கோப்பை தொடரில் அசத்துவார்கள் என்றும் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் அவர்கள் இருவரையும் ஆதரித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே ஜாம்பவான் வீரர்கள்.

- Advertisement -

இத்தனை ஆண்டு காலம் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அவர்கள் நிச்சயம் அடுத்த 2027 உலக கோப்பை தொடரிலும் முக்கிய வீரர்களாக விளையாடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்களது அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் தடுமாற காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : எதிர்த்து பேசியதால் ஷமியின் கேரியரை முடித்து வைக்கும் தேர்வுக்குழு? இந்தியா ஏ அணியிலிருந்து டாட்டா

ஆஸ்திரேலியா வந்ததுமே இங்குள்ள ஆடுகளத்தின் தன்மையை கணித்து ரிதத்திற்கு வருவது சற்று கடினம். எந்த வீரராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவிற்கு வந்த உடனே சிறப்பாக பேட்டிங் செய்வது கடினம் அதனால் இந்த தொடரின் முதல் போட்டியை மோசமாக தொடங்கிய அவர்கள் நிச்சயம் அடிலெய்டு போட்டியிலிருந்து மீண்டும் பார்மிற்கு வருவார்கள் என்றும் ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -