இந்த வேர்ல்டுகப்லயே சச்சினோட அந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பாரு – ரிக்கி பாண்டிங் கருத்து

Ponting-Sachin-Kohli
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த மிகப்பெரிய தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 201- ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் முழுக்க முழுக்க நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணியே வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்தியா தங்களது முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது. தற்போது வரை நடைபெற்ற முடிந்துள்ள லீக் ஆட்டங்களில் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணி முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வேளையில் இரண்டாவதாக இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 200 ரன்களை சேசிங் செய்தபோது இரண்டு ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரது அற்புதமான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது.

மேலும் இந்த தொடர் முழுவதுமே விராட் கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவரும் நம்பிக்கை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்த உலகக் கோப்பை தொடரிலியே ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று தெரிவித்துள்ளார், இது குறித்து கூறிய பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

கண்டிப்பாக இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி இந்த சாதனையை செய்வார் என்று நினைக்கிறேன். ஏனெனில் சச்சினின் சாதனையை சமன் செய்ய அவருக்கு இரண்டு சதங்கள் மட்டுமே தேவை. என்னை பொருத்தவரை நிச்சயமாக அவர் இந்த தொடரில் இரண்டு சதங்களை அடிப்பார். மேலும் மூன்றாவது சதத்தை அவர் இந்த தொடரில் அடிப்பாரா? என்பது வேறு விஷயம். ஆனால் இங்குள்ள மைதானங்களில் அதிக ரன்கள் கட்டாயமாக எடுக்க முடியும்.

இதையும் படிங்க : வீடியோ : கலாய்க்க வேண்டாமென ரசிகர்களிடம் சொன்ன கிங் கோலி.. கைகொடுத்த நவீன்.. நட்பாக மாறிய பகை

விராட் கோலிக்கு இது கடைசி உலக கோப்பை தொடராக கூட இருக்கலாம். எனவே அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் குவிக்க விரும்புவார். மேலும் எப்போதுமே அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடும் கோலி கட்டாயம் சச்சினின் சாதனையை முறியடிக்க அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளதாக பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் 49 சதங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 47 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement