கலாய்க்க வேண்டாமென ரசிகர்களிடம் சொன்ன கிங் கோலி.. கைகொடுத்த நவீன்.. நட்பாக மாறிய பகை

naveen ul haq 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 272/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாகிதி 80 ரன்களும் ஓமர்சாய் 62 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 16 பவுண்டரி 5 சிக்ஸருடன் 131 (84) ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினார். அவருடன் இசான் கிசான் 47, விராட் கோலி 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 25* ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

நட்பாக மாறிய பகை:
அதனால் ஆப்கானிஸ்தான் சார்பில் ரசித் கான் 2 விக்கெட்களை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் இந்திய ஜாம்பவான் விராட் கோலி ஆகியோரிடைய சண்டை ஏற்பட்டதை அனைவரும் அறிவோம். குறிப்பாக அப்போட்டியின் முடிவில் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு கௌதம் கம்பீரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையாக மாறியது.

அதன் பின்பும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீன் மாம்பழங்களை வைத்து விராட் கோலியை வம்பிழுப்பதை வழக்கமாக இருந்தார். இறுதியாக லக்னோ தோல்வியை சந்தித்து வெளியேறிய போது அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த இந்திய வீரர்கள் மாம்பழங்களை வைத்து தக்க பதிலடி கொடுத்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவரை பார்க்கும் போதெல்லாம் இந்திய ரசிகர்கள் கோலி கோலி கூச்சலிட்டு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

அந்த வரிசையில் இப்போட்டியில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது விராட் கோலியின் சொந்த ஊரான டெல்லி கோட்டையில் “கோலி கோலி” என்று விண்ணதிர முழங்கி ரசிகர்கள் மாஸ் காட்டினர். அதை விட 2வது இன்னிங்ஸில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது நவீன் பந்து வீசுவதற்காக வந்தார். அப்போது தொடர்ந்து கோலி கோலி என்று ரசிகர்கள் கூச்சலிட்டு தங்களுடைய எதிர்ப்புகளை உச்சகட்டமாக வெளிப்படுத்தினர்.

ஆனால் அந்த சமயத்தில் விராட் கோலியே அவ்வாறு நவீனை கிண்டலடிக்க வேண்டாம் என்று கையை அசைத்து கேட்டுக் கொண்டதை தொடர்ந்து ரசிகர்கள் ஓரளவு அமைதியானார்கள். அதனால் நெகிழ்ந்த நவீன் தாமாக சென்று விராட் கோலியிடம் கையை கொடுத்து நட்பு பாராட்டினார். அதை ஏற்றுக்கொண்ட விராட் கோலியும் சிரித்த முகத்துடன் கையை கொடுத்து அவரின் தோளில் தட்டி கொடுத்தார். அதை கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனை செய்தார். மொத்தத்தில் ஐபிஎல் தொடரில் உருவான மோதல் உலகக் கோப்பையில் நட்பாக முடிந்துள்ளது சிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement