ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நிறைவு பெற்று சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்காக பலப்பரீட்சை நடத்த துவங்கியுள்ளன. அந்த சுற்றில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த பாகிஸ்தான் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி பரம எதிரி இந்தியாவை மீண்டும் எதிர்கொள்கிறது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்ததை போலவே பாகிஸ்தானின் பந்து வீச்சில் ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 66/4 என சரிந்த இந்தியா 150 ரன்களாவது தாண்டுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்ட போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய இஷான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 266 ரன்கள் குவிக்க உதவினார்கள். இருப்பினும் அதை பாகிஸ்தான் சேசிங் செய்ய துவங்கிய போது வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது.
மகிழ்ச்சியான அறிவிப்பு:
எனவே அந்த போட்டியில் சந்தித்த பின்னடைவுக்கு இம்முறை பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல அந்த போட்டியில் இந்தியாவுக்கு பரிசளிக்க வேண்டிய தோல்வியை மழை வந்து தடுத்ததால் இம்முறை 100% சிறப்பாக செயல்பட்டு மீண்டும் கொடுப்போம் என்று கேப்டன் பாபர் அசாம் வங்கதேசத்தை வீழ்த்திய பின் தெரிவித்திருந்தார்.
ஆனால் செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் கொழும்பு நகரில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவிப்பதால் அப்போட்டியும் நடைபெறுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இது போக இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருவதால் 2023 உலகக் கோப்பைக்கு ஆசிய தயாராகும் வகையில் நடக்கும் இத்தொடரில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் செப்டம்பர் 11ஆம் ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது. அதனால் செப்டம்பர் 10ஆம் தேதி மழை வந்து போட்டியை தடுத்தால் டிக்கெட்டை வாங்கிய ரசிகர்கள் அதை அடுத்த நாள் பத்திரமாக வைத்திருந்து கொண்டு வருமாறு ஆசிய கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
இதையும் படிங்க: அம்மாவ மிஞ்சிய சக்தியே இல்ல அவங்க பேச்ச எல்லாரும் கேளுங்க – தனது வாய்ப்பை முன்னரே கணித்த அம்மா பற்றி லபுஸ்ஷேன் வியப்பு
இருப்பினும் சூப்பர் 4 சுற்றின் எஞ்சிய போட்டிகளுக்கும் மழையின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமே ஸ்பெஷலாக ஆசிய கவுன்சில் ரிசர்வ் நாளை அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியை வைத்துள்ளது. குறிப்பாக இந்தியா – இலங்கை, இந்தியா – வங்கதேசம் ஆகிய போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் செப்டம்பர் 10ஆம் தேதி கொழும்புவில் 100% பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள மழை செப்டம்பர் 11ஆம் தேதி 90% பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரிசர்வ் நாள் திட்டம் எந்தளவுக்கு வெற்றியை கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.