அம்மாவ மிஞ்சிய சக்தியே இல்ல அவங்க பேச்ச எல்லாரும் கேளுங்க – தனது வாய்ப்பை முன்னரே கணித்த அம்மா பற்றி லபுஸ்ஷேன் வியப்பு

- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற அடுத்ததாக 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ப்ளூம்போயிண்டன் நகரில் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா கடுமையாக போராடி 49 ஓவரில் 222 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா தனி ஒருவனாக போராடி சதமடித்து 114* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதைத்தொடர்ந்து 2022 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 0, டிராவிஸ் ஹெட் 33, மிட்சேல் மார்ஷ் 17, ஜோஸ் இங்லிஷ் 1, அலெக்ஸ் கேரி 3, மார்கஸ் ஸ்டோனிஸ் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அம்மாவின் மேஜிக்:
அதற்கிடையே கேமரூன் கிரீன் தலையில் அடி வாங்கி காயமடைந்து வெளியேறியதால் 93/6 என ஆரம்பத்திலேயே மொத்தமாக சரிந்த ஆஸ்திரேலியாவை பிளேயிங் லெவனில் இடம் பெறாத மார்னஸ் லபுஸ்ஷேன் சப்ஸ்டியூட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி பாதியில் களமிறங்கினார். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அவர் 48* ரன்கள் எடுத்து கை கொடுத்த ஆஸ்டன் அகருடன் சேர்ந்து 8வது விக்கெட்ருக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 80* ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.

அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனை படைத்த அவர் தென்னாப்பிரிக்க மண்ணில் 11 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் வென்று சரித்திரம் படைப்பதற்கும் உதவி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் காரணமாக தம்மை 2023 உலகக்கோப்பையில் தேர்வு செய்யாத ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவுக்கும் அவர் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டியில் தாம் இடம் பெறவில்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் விளையாடுவேன் என்று தம்முடைய அம்மா தெரிவித்ததாக மார்னஸ் லபுஸ்ஷேன் கூறிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டி முழுவதும் இங்கே இருந்த அவர் நான் மைதானத்திற்கு வந்த போது நிச்சயமாக இப்போட்டியில் விளையாடுவேன் என்று என்னிடம் சொன்னார்”

இதையும் படிங்க: உங்களுக்கு வேலையில்லயா, நாங்க எதாவது சொல்றமா? இந்தியா பற்றி பேசிய பாக், ஆஸி முன்னாள் வெளிநாட்டு வீரர்களை – தாக்கிய கவாஸ்கர்

“அதற்கு அம்மா நான் விளையாடும் 11 பேர் அணியை பார்த்து விட்டேன். அதில் நான் இல்லை என்று அவரிடம் பதிலளித்தேன். இருப்பினும் ஏதோ ஒரு உணர்வால் நிச்சயம் நீ விளையாடுவாய் என்று மீண்டும் என்னிடம் அம்மா சொன்னது தற்போது நிஜமாகியுள்ளது” என்று கூறினார். அப்படி தம்முடைய மகன் சிறப்பாக விளையாடி வெற்றியையும் பெற்று கொடுத்ததை நேரில் பார்த்த அவருடைய அம்மா இறுதியில் போட்டியின் முடிவில் தமது மகனை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த வகையில் இந்த உலகில் அம்மாவை மிஞ்சிய சக்தி இல்லை என்பதால் அவர்களுடைய பேச்சை அனைவரும் கேளுங்கள் என்று லபுஸ்ஷேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement