உங்களுக்கு வேலையில்லயா, நாங்க எதாவது சொல்றமா? இந்தியா பற்றி பேசிய பாக், ஆஸி முன்னாள் வீரர்களை – விளாசிய கவாஸ்கர்

Former Cricketers
- Advertisement -

சர்வதேச அரங்கில் முதன்மை கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி உலகக் கோப்பைகளில் முக்கியமான தருணங்களில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இத்தனைக்கும் சாதாரண இரு தரப்பு தொடர்களில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற எதிரணிகளை தெறிக்க விடும் இந்தியா நாக் அவுட் போட்டிகளில் மட்டும் தடுமாறுவது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவும் இருக்கிறது. ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் முதல் பாகிஸ்தான் வரை நிறைய அணிகள் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு தடுமாறி வருகின்றன.

எடுத்துக்காட்டாக சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் விளையாடுவதற்கு இங்கிலாந்து ஒரு முறை கூட தகுதி பெறவில்லை. மறுபுறம் 10 வருடங்களாக உலகக் கோப்பை வெல்லாவிட்டாலும் 95% தொடர்களில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு நாக் அவுட் வரை வென்று வருவதே பாராட்டுக்குரிய அம்சமாகும். ஆனாலும் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்ற முன்னாள் வீரர்கள் இந்தியா பற்றி தினந்தோறும் ஏதேனும் விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

சாடிய கவாஸ்கர்:
குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த டேனிஷ் கனேரியா, சோயப் அக்தர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாம் மூடி, ப்ராட் ஹாக் போன்ற முன்னாள் வீரர்கள் இந்தியா “இதில் தவறு செய்து விட்டது அதை சரியாக செய்யவில்லை அந்த வீரர்களை தேர்வு செய்யக்கூடாது” போன்ற பல்வேறு கருத்துகளை தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியை பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளைப் பற்றி இந்தியாவை சேர்ந்தவர்கள் யாரும் பேசுவதில்லை என்று தெரிவிக்கும் அவர் அவர்களுடைய கருத்துக்களை பெரிதாக பதிவிடும் இந்திய ஊடகங்களையும் கடுமையாக சாடியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “வெளிநாடுகளில் இருந்து வரும் கருத்துக்களுக்கு நம்முடைய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பது சோகமானதாகும். அதாவது இந்திய அணியை ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தேர்வு செய்கிறார்கள்”

- Advertisement -

“ஆனால் அதற்கான அவசியம் என்ன? இங்கு எந்த இந்திய வீரர்களாவது சென்று ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியை தேர்வு செய்கிறார்களா? எனவே இது அவர்களுடைய வேலை கிடையாது. ஆனாலும் நாம் அதை அனுமதிக்கிறோம். குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட பாபர் அசாம் சிறந்தவர் என்றும் மகத்தானவர் என்ற கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் சச்சினை விட இன்சமாம் சிறந்தவர் என்று பேசி அவர்கள் ரசிகர்களை கவர்கின்றனர்”

இதையும் படிங்ககிறிஸ் கெயிலின் அந்த மாஸ் உலக சாதனையை உடைக்கனும் ஆசைப்படுறேன் – ஹிட்மேன் ரோஹித் சர்மா விருப்பம்

“எனவே அவர்களுக்கு உங்களுடைய செய்தித்தாள்களில் இடம் கொடுக்காதீர்கள். ஏனெனில் நம்முடைய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரர் இருக்க வேண்டுமென தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் பேசுகின்றனர். குறிப்பாக 3, 4வது இடத்தில் அவர்கள் விளையாட வேண்டும் இவர்கள் விளையாட வேண்டும் என்று வெளிநாட்டவர்கள் சொல்லும் ஆலோசனை நமக்கு தேவையற்றது” என்று கூறினார்.

Advertisement