அவரோட ரீப்ளேஸ்மெண்ட் கூட எங்கள தோற்கடிக்கலாம்.. இந்திய அணியின் தரம் குறித்து பவுமா கவலை

Temba Bavuma 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென்னாபிரிக்கா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளில் பாக்ஸிங் டே போட்டியாக துவங்கும் இப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு இரு அணிகளும் தயாராகியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்காவை முதல் முறையாக அவர்களது ஊரில் தோற்கடித்து இந்தியா சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை தெறிக்க விட்டு பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருப்பதால் இத்தொடரில் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் 2023 கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து எதிரணிகளை தெறிக்க விட்ட முகமது ஷமி இத்தொடரில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தரமான அணி:
இந்நிலையில் காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென்னாப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார். எனவே சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைக்க தாங்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று கவலை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“கிரிக்கெட்டர்களாக நீங்கள் சிறந்தவர்களுக்கு எதிராக அசத்த விரும்புவர்கள். அந்த வகையில் முகமது ஷமி சிறந்த பவுலர்களில் ஒருவராக இருக்கிறார். அவரை போன்ற பவுலர்களை கொண்ட இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால் இந்திய அணியில் ஆழமான திறமை இருப்பதால் மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் என்பதை நம்ப வேண்டும்”

- Advertisement -

“சொந்த மண்ணில் விளையாடும் எங்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் என்பதை அறிவோம். அதனால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை விட நாங்கள் விரைவாக இங்குள்ள சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்வோம் என்று எதிர்பார்க்கிறேன். அதே சமயம் இந்திய அணியில் ஷமி இல்லாமல் போனாலும் அவர்கள் இப்போதும் வலுவான அணியாக இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: ஸ்டார்க், கமின்ஸ் ஓரம்போங்க.. பாண்டியாவை வாங்க மும்பை கொடுத்தது எவ்வளவு கோடிகளா? அதிரும் ரசிகர்கள்

“சொல்லப்போனால் கடந்த 5 முதல் 10 வருட காலங்களில் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான பவுலிங் அட்டாக்கை கொண்டிருப்பதன் காரணத்தாலேயே நிறைய வெற்றிகளை பெற்றுள்ளார்கள். எனவே இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த சவாலான தொடரில் நாங்கள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். 2023 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அனைவரையும் ஈர்க்கும் பிராண்ட் கிரிக்கெட்டை விளையாடினோம். இத்தொடரிலும் அதை கடைபிடிக்க முடியுமா என்பதை நாங்கள் பார்க்க முயற்சித்து வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement