நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND-vs-RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை டிசம்பர் 26-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்கிற மோசமான சாதனையை தகர்த்து முதல் முறையாக அங்கு நடைபெறும் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்களும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நாளை துவங்கவுள்ள இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி நாளைய இந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது துவக்க வீரர்களாக வலது கை, இடது கை ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சுப்மன் கில்லும், நான்காவது இடத்திலும் விராட் கோலியும் விளையாடலாம். ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயா ஐயரும், ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல் ராகுலும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

அதனை தவிர்த்து இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரும் மீதமுள்ள இடங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் விளையாடுவார்கள் என்று நம்பலாம். அந்த வகையில் நாளைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஸ்டார்க், கமின்ஸ் ஓரம்போங்க.. பாண்டியாவை வாங்க மும்பை கொடுத்தது எவ்வளவு கோடிகளா? அதிரும் ரசிகர்கள்

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எல் ராகுல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) முகமது சிராஜ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகேஷ் குமார்.

Advertisement