ஸ்டார்க், கமின்ஸ் ஓரம்போங்க.. பாண்டியாவை வாங்க மும்பை கொடுத்தது எவ்வளவு கோடிகளா? அதிரும் ரசிகர்கள்

Hardik Pandya MI 2
- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக டிரேடிங் முறையில் வாங்கியது. அதைத்தொடர்ந்து தங்களுடைய கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்றும் மும்பை அறிவித்துள்ளது. குறிப்பாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்த முடிவால் மும்பை ரசிகர்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அணியை பின் தொடர்வதை நிறுத்தி மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் சச்சின் தலைமையில் கூட கோப்பையை வெல்ல முடியாமல் திணறிய மும்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோகித் சர்மா குறுகிய காலத்திலேயே 5 கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்க வைத்தார்.

- Advertisement -

மும்பை கொடுத்த பிரம்மாண்டம்:
அந்த வகையில் கோடிகளை கொட்டினாலும் கோப்பையை வெல்ல முடியாமல் திணறும் பல அணிகளுக்கு மத்தியில் 5 கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நன்றி மறந்து மும்பை நிர்வாகம் கழற்றி விட்டதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் மும்பை அணியில் ரோகித் சர்மா தலைமையில் வளர்ந்த பாண்டியா 2022 மெகா ஏலத்தில் 15 கோடிகளுக்கு குஜராத் அணிக்காக வாங்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்து 2வது வருடத்தில் ஃபைனல் வரை குஜராத்தை அழைத்துச் சென்ற அவர் தம்முடைய சொந்த மாநிலத்திற்காக தொடர்ந்து அங்கேயே இருப்பார் என்று அனைவரும் நம்பினர். ஆனாலும் பணத்திற்காக மும்பை அழைத்ததால் தம்மை கேப்டனாக்கிய மாநில அணியை மறந்து ஹர்திக் பாண்டியா சென்றது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை 100 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகையை கொடுத்து குஜராத்திடமிருந்து மும்பை அணி நிர்வாகம் வாங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் அதிரடியான செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக பாண்டியாவை விடுவித்ததால் குஜராத் அணியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு தொகையில் 15 கோடிகள் மட்டுமே வரவாக இருந்தது. ஆனால் டிரேடிங் முறையில் பாண்டியாவை விடுவித்ததற்காக மும்பை 100 கோடிகளை ட்ரான்ஸ்ஃபர் கட்டணமாக கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: சென்சூரியனில் காத்திருக்கும் மழை.. முதல் டெஸ்ட் நடைபெறுமா? முழுமையான வெதர் ரிப்போர்ட் இதோ

இருப்பினும் அந்த உண்மையான டிரான்ஸ்பர் கட்டணம் எவ்வளவு என்பது ஐபிஎல் நிர்வாகத்திற்கு மட்டுமே தெரியும் என்று தெரிவிக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறைந்தது அது 100 கோடியாக இருக்கலாம் என்று கூறியுள்ளது. அந்த வகையில் 24.75, 20.50 கோடிகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டார்க், கமின்ஸ் வாங்கப்பட்டதே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில் தற்போது பாண்டியா இவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார் என்பது ரசிகர்களை வாயை பிளக்க வைக்கிறது என்றால் மிகையாகாது.

Advertisement