சென்சூரியனில் காத்திருக்கும் மழை.. முதல் டெஸ்ட் நடைபெறுமா? முழுமையான வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையில் சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை கே.எல். ராகுல் தலைமையில் 2 – 1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இவ்விரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

அதில் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை வரலாற்றில் ஒரு முறை கூட தோல்வியை சந்திக்காத மாபெரும் கௌரவ சாதனையை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. மறுபுறம் 1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய 8 தொடர்களில் தோல்வியை சந்தித்த இந்தியா கடைசியாக 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் 1 – 1 என்ற கணக்கில் சமன் மட்டுமே செய்தது.

- Advertisement -

காத்திருக்கும் மழை:
எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ராகுல், பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அடங்கிய இந்தியா போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் சென்சூரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.

இருப்பினும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு நிகராக மழையும் விளையாடுவதற்கு தயாராகியுள்ளது. ஆம் இப்போட்டின் நடைபெறும் சென்சூரியன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதியான முதல் நாளன்றே 80% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி துவங்கும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சராசரியாக 70% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

ஆனால் மதியம் 3 மணிக்கு மேல் படிப்படியாக குறைந்து 4, 5, 6 ஆகிய மணிகளில் முற்றிலுமாக மழை நிற்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால் இப்போட்டி தாமதமாக துவங்குவதுடன் முதல் நாள் ஆட்டம் பாதிக்கும் மேல் தடைபடுவதற்கு வாய்ப்புள்ளது. அதே போல 2வது நாளிலும் சராசரியாக 60% வாய்ப்புள்ளதால் மழை விட்டுவிட்டு வந்து சில மணி நேரங்கள் தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 3வது நாளில் முழுவதுமாக கருணை காட்டும் என்று நம்பப்படும் மழை மீண்டும் 4வது நாளில் 30% பொழிவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க: யார்கிட்டயும் சொல்லாம நீ மட்டும் கிளம்பி வா.. ரெய்னாவிற்கு தோனி விடுத்த அழைப்பு – 13 ஆண்டு ரகசியத்தை பகிர்ந்த ரெய்னா

இறுதியாக கடைசி நாளில் 0% மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில் இந்த வானிலை அறிக்கையின் படி குறைந்தது 2 நாட்கள் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெற்று முடிவு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement