சி.எஸ்.கே இம்முறை இறுதிப்போட்டி வரை போகணுனா அது இந்த ரெண்டு பேர் கையில தான் இருக்கு – முன்னாள் வீரர் பேட்டி

CSK-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரை 14 சீசன்களை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 15-வது ஐபிஎல் தொடரானது இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதுவதால் எந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைத்து அணிகளின் ரசிகர்கள் மத்தியிலும் நிலவுகிறது.

CSK-2

- Advertisement -

மேலும் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சி.எஸ்.கே அணியும் சூரத் நகரில் தங்களது பயிற்சியினை மேற்கொண்டு வருகிறத. இந்நிலையில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்த ஆண்டு சென்னை அணியில் பல மாற்றங்கள் இருப்பதால் இம்முறை சென்னை அணி கோப்பையை கைப்பற்றுமா? என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி சென்னை அணி இறுதிப் போட்டி வரை முன்னேற இரண்டு முக்கிய வீரர்கள் அவசியம் என்று பேசியுள்ளார்.

Jadeja

இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணிக்கு ஜடேஜா மிக முக்கியமான வீரராக இந்த ஆண்டு திகழ்வார். தற்போது மிகச்சிறப்பான பார்மில் இருக்கும் அவர் மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் அசத்தி வரும் அவர் சென்னை அணிக்காக எப்போதுமே சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.

- Advertisement -

எனவே இம்முறையும் அவர் கூடுதல் பொறுப்பு ஏற்ற பின் வரிசையில் விளையாட வேண்டும் என்று கூறினார். மேலும் தோனி குறித்து பேசிய அவர் : தோனியால் பழையபடி போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் வேலையை செய்ய முடியாது. எனவே பின் வரிசையில் களம் இறங்குவதை விட முன்கூட்டியே களம் இறங்கி சில பந்துகளை அவர் சந்தித்த பின்னர் பெரிய ஷாட்களுக்கு சென்று ரன் குவிப்பில் ஈடுபடலாம் என்று அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 11 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய வீரர் – வினோத நிகழ்வு

நடப்பு சாம்பியனான சென்னை அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement