11 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய வீரர் – வினோத நிகழ்வு

IPL
- Advertisement -

வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் மும்பையில் ஐபிஎல் போட்டிகளானது கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. ஏற்கனவே 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 15-வது ஐபிஎல் சீசன் நிச்சயம் இந்தியாவில் தான் நடத்த வேண்டும் என்று தீவிர முயற்சி செய்த பிசிசிஐ அதற்கான திட்டங்களை வகுத்து சரியான முறையில் தற்போது போட்டிகளுக்கான அட்டவணைகளையும் வெளியிட்டு அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். அதன்படி இந்த 26 ஆம் தேதி துவங்கும் இந்த ஐபிஎல் தொடரானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

ipl

- Advertisement -

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முழு தொடரும் இந்தியாவில் நடைபெறாமல் போனதால் இந்த ஆண்டு முழுவதுமாக போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலமும் கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது.

இந்த மெகா ஏலத்தில் கலந்துகொண்ட பத்து அணி அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியது. அப்படி வாங்கப்பட்ட வீரர்களில் ஒரு சிலர் அதிக அளவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரி 2011 ஆம் ஆண்டு அறிமுகமான ஒரு வீரர் அதன் பின்னர் வாய்ப்பே கிடைக்காமல் தற்போது மீண்டும் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பிடித்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

wade 1

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 22 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இப்படி சொற்ப ரன்களை எடுத்ததன் காரணமாக டெல்லி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை எந்த அணியும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளாமல் இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான அந்த அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி வீசிய 19வது ஓவரில் 3 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்ட அவர் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாறு : சவாலான கடைசி ஓவர்களில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட – டாப் 5 மாஸ் பேட்ஸ்மேன்கள்

இந்நிலையில் அவரை தற்போது குஜராத் அணி இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாட ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் அவரை குஜராத் அணி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement